ஐஸ்வர்யா ராஜேஷ் சிவாங்கின்னு ஜாலி பண்ணும் இர்ஃபான்.. குக் வித் கோமாளிக்கு வந்த பிறகு கலக்குறாரே!

சென்னை: யூடியூபில் உணவுகளை சாப்பிட்டு அதன் ருசியை விமர்சித்து வந்த இர்ஃபான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக மாறியுள்ளார். நாமும் எத்தனை நாள் தான் மத்தவங்க சமைப்பதையே சாப்பிடுவது இதற்கு மேல் நாம் சமைப்பதை மத்தவங்க சாப்பிடட்டும் என குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5வது சீசனில் அட்டகாசமாக என்ட்ரி கொடுத்துள்ளார்.

அது ஒரு பக்கம் இருக்க ஐஸ்வர்யா ராஜேஷ், சிவாங்கி என தொடர்ந்து செலிபிரிட்டிகளுடன் அவர் செல்ஃபி எடுத்து வெளியிடும் போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகிறது.

Cook with Comali contestant Youtuber Irfan took photos with Aishwarya Rajesh Sivaangi and Maya

9 லட்சம் ரசிகர்கள் இர்ஃபானை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின் தொடர்ந்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே ஒரு மில்லியன் ஃபாலோயர்களை கடந்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுடன்: சில நாட்களுக்கு முன்னதாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்த இர்ஃபான் நல்ல நடிகை மற்றும் நல்ல தோழி என அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். பிக் பாஸ் சீசன் 7க்கு போட்டியாளராக இவர் வருவார் என தகவல்கள் வெளியான நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5க்கு போட்டியாளராக வந்துள்ளார்.

Cook with Comali contestant Youtuber Irfan took photos with Aishwarya Rajesh Sivaangi and Maya

பிக் பாஸ் மாயாவுடன்: விக்ரம், லியோ படங்களில் நடித்து பிரபலமான பிக் பாஸ் மாயாவுடனும் சமீபத்தில் சந்தித்து இர்ஃபான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட மாயா ரசிகர்கள் இர்ஃபானுக்கு ஏகப்பட்ட லைக்குகளை பதிவிட்டு வருகின்றனர். இவர்களை எல்லாம் வைத்து ஏதோ ஒரு சீரிஸ் வெளியிட போவதாகவும் இர்ஃபான் அறிவித்துள்ளார். விரைவில் அவரது யூடியூப் சேனலில் பிரபலங்கள் பங்கேற்ற ஃபுட் ஷோ நிச்சயம் வெளியாகும் என தெரிகிறது.

Cook with Comali contestant Youtuber Irfan took photos with Aishwarya Rajesh Sivaangi and Maya

சிவாங்கியுடன் செல்ஃபி: குக் வித் கோமாளிக்கு போட்டியாளராக சென்றுள்ள இர்ஃபான் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியான சிவாங்கியுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஏதோ ஒரு ரெஸ்டரன்டில் இந்த பிரபலங்களுடன் இர்ஃபான் சந்திப்பு நடத்தி வருவது பேக்கிரவுண்டை பார்த்தால் தெரிகிறது. கூடிய சீக்கிரமே இர்ஃபான் தனது ரசிகர்களை சர்ப்ரைஸ் செய்ய காத்திருக்கிறார்.

Cook with Comali contestant Youtuber Irfan took photos with Aishwarya Rajesh Sivaangi and Maya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X