குக் வித் கோமாளி அஸ்வினுக்கு விரைவில் திருமணம்.. அவரு கட்டிக்கப் போற பொண்ணு யாரு தெரியுமா?

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நடிகர் அஸ்வின் குமார் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.

விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலம் அறிமுகமான அஸ்வின் குமார் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமின் அண்ணனாக நடித்திருந்த அஸ்வின் ஓ மணப்பெண்ணே படத்தில் பிரியா பவானி சங்கரின் எக்ஸ் லவ்வராக நடித்திருப்பார்.

Cook with Comali fame Ashwin Kumar will get engage soon?

பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அஸ்வின் குமார் 2021ம் ஆண்டு வெளியான என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவானார். அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அஸ்வின் பேசிய பேச்சு அவருக்கே பெரிய ஆப்பாக அமைந்து விட்டது.

கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன்: ஹீரோவாக என்ன சொல்ல போகிறாய் படத்தில் அறிமுகமான அஸ்வின் அந்த படத்தின் கதையை கேட்பதற்கு முன்பாக 40 கதைகள் கேட்டதாகவும் கதை பிடிக்கவில்லை என்றால் பாதியிலேயே தூங்கி விடுவேன் என்றும் பேசியிருந்தார்.

அவரது அந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், என்ன சொல்ல போகிறாய் படம் வெளியான பின்னர், இந்த படத்திற்காக இப்படியொரு பில்டப் பேச்சு என ஸ்லீப்பிங் ஸ்டார் பட்டமே கொடுத்து அஸ்வினை பலரும் ட்ரோல் செய்தனர். பின்னர், தனது பேச்சுக்காக அஸ்வின் மன்னிப்பும் கேட்டிருந்தார்.

செம்பியில் நல்ல நடிப்பு: மைனா, கும்கி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் வித்தியாசமான கெட்டப்பில் கோவை சரளா நடித்த செம்பி படத்தில் வழக்கறிஞராக அஸ்வின் குமார் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தி தனது சோஷியல் மீடியா ரசிகர்களையும் குக் வித் கோமாளி ரசிகர்களையும் குஷிப்படுத்தினார்.

தெலுங்கில் சில படங்களில் நடித்து வரும் அஸ்வின் கூடிய விரைவில் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தயாரிப்பாளர் மகள்: நடிகர் அஸ்வினின் நடிப்பு மற்றும் அவரது ஹேண்ட்ஸமான அழகு பிடித்துப் போக பிரபல தயாரிப்பாளர் தனது மகளையே கட்டிக் கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த திருமணம் காதல் திருமணமா? அல்லது பெரியவர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமா? என்பதெல்லாம் விரைவில் அஸ்வின் தரப்பில் இருந்தே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X