கடைசில அஸ்வினையும் அழ வச்சிட்டீங்களேப்பா... ஷிவாங்கிதான் காரணம்!
சென்னை: குக் வித் கோமாளி அஸ்வின் தெரியாதவர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த இவர் தற்போது கண்ணீரோடு வெளியிட்டிருக்கும் போஸ்ட் தான் வைரலாக பரவி வருகிறது .
இவ்வளவு நாள் காத்திருந்து இப்போதுதான் அது எனக்கு கிடைத்திருக்கிறது என்று இவர் கூறியதைக் கேட்டு அவருடைய ரசிகர்கள் அவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வந்து கொண்டிருக்கின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சிகளில் பல பேர் பார்த்து ரசிக்கும் நிகழ்ச்சியாக தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான் இருந்துகொண்டிருக்கிறது.

கவர்ந்திழுத்த கோமாளி
சீரியல்களை பிடிக்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்காக டிவி முன்பு காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு கலகலப்பாக ஜாலியாகவும் இருக்கும் இதனை பார்த்து ரசித்து வருகின்றனர். ஆனால் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே இது ஒளிபரப்பப் படுவதால் இதன் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்காக ஏங்கிக் காத்திருக்கின்றனர். ஆனாலும் ஒரு வாரத்திற்குத் தேவையான என்ஜாய்மென்ட் இரண்டு நாட்களில் கொடுத்துவிட்டு சென்று விடுகின்றனர்.

எல்லோருக்கும் பிடித்த அஸ்வின்
அதில் பலருக்கும் ஃபேவரட் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் அஸ்வின் தான். இவர் எப்போதுமே சிரித்த முகமாக ஜாலியாக இருப்பதை பார்த்து பல பேருக்கு பிடித்துக் கொண்டிருக்கிறது. இவரும் அஸ்வினும் சிவானியும் சேர்ந்து செய்யும் சேட்டைகளை பார்த்து ரசித்துதான் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக பலபேர் ஆரம்பித்திருக்கின்றனர்.

ரோல் மாடல்
ஆனாலும் குழந்தைகளின் ஹீரோவாகவும் இளைஞர்களின் ரோல்மாடல் ஆகவும் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் பல விளம்பர மாடலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார். அதுவுமில்லாமல் சில ஷார்ட் பிலிம் களில் நடித்துக் கொண்டிருந்தாலும் அந்த அளவிற்கு வெளியே தெரியாமல் இருந்த இவர் இந்த நிகழ்ச்சி மூலமாக இவரது பெயரைச் சொன்னதுமே டக்கென்று அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும் அளவிற்கு பாப்புலராகி விட்டார்.

மட்டம் தட்டிய கும்பல்
இவர் சினிமா துறையில் வரும்போது பல பேர் இவரை டிஸ் கரேஜ் பண்ணி இருக்கிறார்கள். இந்த பீல்டு உங்களுக்கு செட்டாகாது நடிப்பதற்கு கொஞ்சம் கூட வரவில்லை என்றுதான் எல்லோரும் இவரை மட்டம் தட்டி பார்த்திருக்கின்றனர். ஆனாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் இந்த அளவிற்கு தற்போது வளர்ந்துள்ளார் .இவருக்கு உழைப்புக்கு கிடைத்த வெகுமதியாக தான் தற்போது இவருக்கு விருதுகள் கிடைத்திருக்கிறது.

ஆனந்தக் கண்ணீர்
அதனை பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு எனக்கு ஏழு வருடங்கள் ஆகியிருக்கிறது. ஆனால் தற்போது இப்படிப்பட்ட ஒரு விருது கிடைப்பது என்னால் மறக்க முடியாது என்று ஆனந்தத்தோடு இவர் போஸ்ட் போட்டிருக்கிறார். இவருடைய போஸ்ட் பார்த்து இவருடைய ரசிகர்கள் கமெண்ட் மழைகளை பொழிந்து வருகிறார்கள் .

மனம் கவர்ந்த ஷிவாங்கி
அதுவும் இன்னமும் நீங்கள் மேலே சொல்லுவீர்கள் என்று ஆசீர்வாதங்களையும் அளித்து வருகின்றனர். அதனால் சந்தோஷத்தில் இவர் குதித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் அந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் இவரும் ஷிவாங்கியும் ரொம்பவே ஆர்வமாக பேசிக் கொண்டிருக்கும் போட்டோக்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த போட்டோவையும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார்.

கெஸ் பண்ணுங்க
அதனை பார்த்து அவர்களுடைய ரசிகர்கள் அப்படி என்ன இவ்வளவு தீவிரமாக பேசிக் கொண்டிருந்தீர்கள் என்று கேள்வி கேட்டு வருகிறார்கள் அதுவும் இல்லாமல் இவர்கள் இருவரும் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் உங்களால் கெஸ் பண்ண முடிகிறதா என்று ஒரு ஹேஷ்டேக் உருவாக்கி இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றனர்.

சந்தோஷ மொமன்ட்
இந்த சந்தோசமான மூவ்மெண்ட் மட்டுமில்லாமல் இவரும் புகழும் மேடையில் விருது வாங்கும்போது அஸ்வின் கண்ணீர்விட்டு கதறி அழுத போட்டோக்களும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது. இந்த போட்டோவிற்கு அஸ்விநே என்று பாஸ்டர் ஹேஸ்டேக் போட்டு வைரலாகி வருகின்றனர். ரசிகர்கள் ஷிவாங்கி பாணியில் அஸ்விநே..... என்று அழைத்து வருகின்றனர். ஆனால் பாருங்க அஸ்வினுக்கு இந்த அளவுக்கு கிரேஸ் கிடைக்க ஷிவாங்கியும்தான் ஒரு காரணம்!


Click it and Unblock the Notifications











