மரத்தில் கையை ஊன்றி.. லைட்டா திரும்பிப் பார்த்த தர்ஷா.. விழுந்து ரசிக்கும் ரசிகர்கள்!
சென்னை: தினமும் போஸ்ட் போடவில்லையே என ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்காக மீண்டும் களத்தில் வெறித்தனமாக இறங்கியிருக்கும் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் எதைப் பார்ப்பது எதை விடுவது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.
தர்ஷா குப்தா என்னும் பெயரை கேள்விப்பட்டதுமே இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் துள்ளலான ஆட்டம் போடும் அளவிற்கு பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார்.
முதுகு தெரிய அவர் கொடுத்துள்ள லேட்டஸ்ட் போஸ்ட்தான் ரசிகர்களை தத்தளிக்க வைத்து விட்டது. அதைத்தானே அவரும் எதிர்பார்க்கிறார்!.

ஆசைப்பட்ட ரசிகர்கள்
ரசிகர்கள் ஆசைப்பட்டது போலவே விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் வைல்ட் கார்ட் வழியாக என்ட்ரி கொடுப்பதுபோல இன்ஸ்டாகிராமில் புது என்ட்ரி போட்டுத் தாக்கி இருக்கிறார். தற்போது இருக்கும் நடிகைகளில் அதிகமான இளைஞர்கள் பட்டாளத்தை ரசிகர்களாக வைத்திருப்பதில் இவர்தான் முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

ரசிகர்களின் செல்லம்
என்னதான் சீரியல் நடிகைகள் கிளாமர் ஃபோட்டோஸ் போட்டு இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வந்தாலும் எல்லாருமே இவருக்கு பிறகு தான். இவரைப் பார்த்து பல ரசிகர்கள் எங்கள் செல்ல தலைவி என்று இவருக்கு ரசிகர்கள் மன்றம் வைப்பதற்கு காரணம் இவரது குழந்தைத்தனமான பேச்சும் அழகும் மட்டுமல்லாமல் ரசிகர்களுடன் எந்த ஈகோவும் இல்லாமல் பழகும் குணம் தான் என பல ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

செம ஸ்மைல்
இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்து ரசிகர்களுடன் பேசினாலும் சரி அல்ல பங்ஷனில் கலந்து கொள்ளும்போது ரசிகர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தாலும் சரி குழந்தைபோல அனைவரையும் கவர்ந்து விடும் இவரது சிரித்த முகத்தையும் ஜாலியான பேச்சாலும் தான் இவருக்கு நாளுக்குநாள் ரசிகர்கள் பட்டாளம் பெருகிவருகிறது. செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கேரக்டரில் கலக்கிக் கொண்டிருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில் கதாநாயகிகளை மிஞ்சும் அளவில் ரசிகர்கள் பட்டாளத்தை தினமும் பெருகி வந்து கொண்டிருக்கிறார் .

ரொம்பப் பிடிச்சு போச்சு
இவரை ஒருமுறை பார்த்ததுமே பிடித்துப் போன ரசிகர்கள் இவருக்கு போலவர்ஸ்களாக மாறிவிடுகின்றனர். அதனால்தான் இவர் இரண்டு மில்லியன் பாலோவர்ஸ்களை தாண்டி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் கூட தன்னுடைய ரசிகர்களுடன் 2 மில்லியன் பாலோவர்ஸ் கொண்டாட்டத்தைக் கொண்டாடி இருந்தார் .

திக்குமுக்காட வைக்கிறார்
பல நடிகைகள் வீட்டில் இருந்துகொண்டு அல்லது ஹோட்டலில் ரூம் போட்டு தன்னுடைய பேமிலி உடன் தனக்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என செலப்ரேட் பண்ணி வந்து கொண்டிருக்கும் போது இவர் அவருடைய ரசிகர்கள் அனைவரையும் வரவழைத்து ஒன்றாக விருந்து போட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துவிட்டார். தற்போது ஒரு நடிகைக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்ஸ்டாகிராமில் அவர்களுக்கு இருக்கும் பாலோவர்ஸ் வைத்துதான் முடிவு பண்ணி வருகிறார்கள்.

பின்பற்றுவோர் அதிகம்
அந்த மாதிரி இருக்கும் நிலையில் இவரின் பாலோவர்ஸ் நாளுக்கு நாள் அதிகமாகி வருவதை பொறுத்தே இவர் அடுத்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு ரம்யா பாண்டியன் ஷிவானி என பலரையும் இந்த மாதிரி தான் பிக்பாஸ் செலக்ட் பண்ணி இருக்கிறது. அதனால் அடுத்த கன்டஸ்டன்ட் எங்க தார்ஷா தான் என அவருடைய ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள் .

ரசிகர்கள் விருப்பம்
ஆனாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று விடாதீர்கள் என சில ரசிகர்கள் இப்போவே அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ரீ ஆனதும் சந்தோசமான இவருடைய ரசிகர்கள் கண்டிப்பாக இந்த ரவுண்டில் ஜெயிக்க வேண்டும் என இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர் .

முதுகு தெரிய போஸ்
விஜய் டிவியின் ப்ரோமோ பார்ப்பதற்கு முன்னர் வரை எப்படியாவது இதில் என்ரி ஆகி விடுங்கள் என கெஞ்சிக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது ப்ரோமோ பார்த்ததும் இன்ப அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக மீண்டும் இவர் தினமும் போஸ்ட் போட ஆரம்பித்து விட்டார் என சந்தோஷமான ரசிகர்கள் இவருக்காக கவிதைகளை தேடி வருகிறார்கள் .என்னதான் இவர் விதவிதமாக போஸ்ட் போடுவதற்கு போட்டோஷூட் நடத்தினாலும் உடனே அவரை வர்ணித்து கவிதைகளை எழுதுவதற்கு பல ரசிகர்கள் கவிஞர்களாக மாறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











