சரியான சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டேன்.. மனைவி பற்றி இர்ஃபான் வெளியிட்ட வீடியோ.. அதுதான் விஷயமா?
சென்னை: பிரபல ஃபுட் ரிவ்யூவரான இர்ஃபான் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு கலக்கினார். சோஷியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் அவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினர் என அனைவரையும் வீடியோவில் காட்டி வருகிறார்.
குழந்தையின் பாலினத்தை அறிவித்து வீடியோ போட்டார் என இர்பான் மீது குற்றச்சாட்டுகள் கிளம்பி சர்ச்சையை கிளப்பின. அதன் பின்னர் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக கலந்துக் கொண்டு ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த இர்ஃபான் தற்போது தனது மனைவி பற்றி வீடியோ ஒன்றில் வைஃப் அலப்பறைகள் என பேசியுள்ளார்.

மனைவி வாங்கிக் கொடுத்த புதிய டி ஷர்ட் சுத்தமாக நல்லாவே இல்லை என்றும் அதை போட சொல்லி டார்ச்சர் செய்கிறார் என்றும் இர்ஃபான் கூறியுள்ள அந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
யூடியூபர் டு குக் வித் கோமாளி பிரபலம்: இர்ஃபான் வியூ எனும் யூடியூப் சேனலில் வித விதமான உணவுகளை பல ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிட்டு அதன் ருசி குறித்தும் அந்த ஹோட்டலின் தரம் குறித்தும் வீடியோக்களை வெளியிட்டே பிரபலமானவர் தான் இர்ஃபான். தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக அவர் பங்கேற்ற நிலையில், ரியாலிட்டி ஷோ செலிபிரிட்டியாகவே மாறியுள்ளார்.
சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டேன்: தனது மனைவியை தொடர்ந்து யூடியூப் சேனலிலும் அவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் ரீலிலும் காட்டி வருகிறார். இந்நிலையில், மனைவி கொடுத்த டி ஷர்ட்டை வாங்கி மாட்டிக் கொண்ட இர்ஃபான் இந்த டி ஷர்ட் நல்லாவே இருக்காதுன்னு எனக்குத் தெரியும். இதை போட்டே ஆகணும்னு டார்ச்சர் பண்றா, சரியான சைக்கோ கிட்ட மாட்டிக்கிட்டேன் என சொல்லிக் கொண்டே இருக்கும் போது அவர் மனைவி வர இருவரும் ஒரே மாதிரியான உடையை அணிந்திருந்தனர்.
ட்வின்னிங்: இந்த டி ஷர்ட் என் மனைவி எனக்கு கிஃப்ட்டா கொடுத்தா இருவரும் ட்வின்னிங் செய்றோம் என அப்படியே பிளேட்டை மாற்றி பேசி விட்டு கடைசியாக how do i tell you என வடிவேலு போல ரியாக்ஷன் கொடுத்து வீடியோ வெளியிட்டு லைக்குகளை குவித்துள்ளார். இப்படித்தான் ஜாலியா ஆரம்பிக்கும் அப்படியே பெரிய விரிசல் ஆகிடும் பார்த்து இருங்க இர்ஃபான் ப்ரோ என்றும் இத்தனை வருஷமா நீங்க போட்டதிலேயே உருப்படியான டி ஷர்ட்னா அது இதுதான் உங்க மனைவியோட சாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு என்றும் அவரது ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
திமுகவில் இணைந்து விட்டாரா?: மேலும், சில நெட்டிசன்கள் சிகப்பு மற்றும் கருப்பு டி ஷர்ட்டை இர்ஃபான் அணிந்திருப்பதை பார்த்து திமுகவில் இணைந்து விட்டார் என்றும் ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினே இவருக்கு நண்பர் தான் என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோவை உங்க மனைவி பார்த்தா உங்க நிலைமை என்னாகும்னு கொஞ்சம் யோசிங்க இர்ஃபான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.
பிக் பாஸ்க்கு வாங்க?: குக் வித் கோமாளி பிரபலங்கள் பலர் பிக் பாஸ்க்கு வருவதும், பிக் பாஸ் பிரபலங்கள் குக் வித் கோமாளிக்கு செல்வதும் வழக்கமான ஒன்று தான். இர்ஃபான் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டுக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











