பாடகி... நடிகை... தொகுப்பாளினி... ரவுண்டு கட்டும் சிவாங்கி!
சென்னை : விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சிவாங்கி அதே நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர்8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த தகவலை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
அவருக்கு ரசிகர்கள் மேலும், மேலும் வளரவேண்டும் என்று வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வெகுளியான சிவாங்கி
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஒரு பாடகராக கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார் சிவாங்கி. பின்னர் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டு பாடினார். அந்த நிகழ்ச்சிகளில் அவரது வெகுளித்தனமான பேச்சு அனைவரையும் சிரிப்பூட்டியது.

குக்வித் கோமாளியில்
இதையடுத்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக வந்தார். இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன் முடிவடைந்த நிலையில் மூன்றாவது சீசன் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணமே அதில் வரும் கோமாளிகள்தான். குறிப்பாக புகழ், ஷிவாங்கி, பாலா, மணிமேகலை, சரத் உள்ளிட்ட கோமாளிகள் செய்யும் சேட்டைகள் அனைவரையும் சிரிக்க வைத்தன.

கனி வெற்றி பெற்றார்
முதல் சீசன் ஒளிபரப்பான போது ஒரு சமையல் நிகழ்ச்சியில் கோமாளிகளுக்கு என்ன வேலை என ஆரம்பத்தில் கேள்வி எழுந்தது. ஆனால் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக கொண்டு சென்றனர். முதல் சீசனில் நடிகை வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தொகுப்பாளினியாக
இந்நிலையில், தான் பாடகராக அறிமுகமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை வரும் வாரங்களில் சிவாங்கி தொகுத்து வழங்க உள்ளார். இந்த தகவலை சிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு அவரின் தீவிர ரசிகர்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் என்று சிவாங்கியை மனதார வாழ்த்தி வருகின்றனர்.

சினிமாவில் வாய்ப்பு
சிவாங்கி, சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் படத்திலும், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகிள் 15 தமிழ் ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விஜய் சேதுபதி, அருண் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











