Sivaangi: காதலர் இல்லைன்னா மாலத்தீவுக்கு போகக் கூடாதா?.. சிவாங்கி யார் கூட போயிருக்காரு பாருங்க!
சென்னை: மாலத்தீவுக்கு சமீப காலமாக சில பிரச்சனைகள் காரணமாக நடிகைகள் செல்லாமல் இருந்து வந்தனர். அதற்கு பதிலாக லட்சத்தீவுக்கு சிலர் சென்று வந்தனர். ஆனால், தற்போது விஜய் டிவியின் பிரபலமான சிவாங்கி மாலத்தீவுக்கு சென்றுள்ளார். அதன் வீடியோவை தனது யூடியூப் பக்கத்தில் அவர் தற்போது ஷேர் செய்து லைக்குகளை அள்ளி உள்ளார்.
மாலத்தீவுக்கு ஜோடியுடன் தான் போக வேண்டும் என்றே பலரும் நினைப்பார்கள். ஆனால், அதற்கு எல்லாம் தனக்கு இன்னும் நிறைய ஆண்டுகள் ஆகும் என நினைக்கிறேன். அதற்காக மாலத்தீவை ரசிக்க கூடாதா என்ன? என நினைத்து உடனடியாக டிக்கெட் போட்டு கிளம்பி விட்டேன் எனக் கூறியுள்ளார்.

சிவாங்கி தனது தம்பியுடன் இணைந்து மாலத்தீவுக்கு சென்ற நிலையில், இருவரும் அங்கே அடிக்கும் லூட்டிகளை வீடியோவாக வெளியிட்டுள்ளனர்.
குக் வித் கோமாளி பிரபலம்: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் சிவாங்கி. பாடகியாகவும் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து நடிகையாகவும் மாறியவர் சிவாங்கி. சோஷியல் மீடியாவில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பிரியங்கா தேஷ்பாண்டே போல இவரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். விஜய் டிவியில் இவருக்கும் மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தம்பியுடன் மாலத்தீவு டூர்: காதலர் உடன் தான் மாலத்தீவுக்கு செல்ல வேண்டுமா? என்ன என்கிற கேள்வியுடன் சிவாங்கி தனது தம்பியுடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரியங்கா மற்றும் மணிமேகலை சண்டை பெரிதாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் ஜாலியாக தனது தம்பியுடன் சொகுசு ஹோட்டலில் கடலை பார்த்தபடி படுத்துக் கொண்டு அரட்டை அடிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

எவ்வளவு பெரிய பாத்ரூம்: மாலத்தீவுக்கு விமானத்தில் ஏறி இறங்கி அங்கே உள்ள மிதக்கும் ரெசார்ட்டுக்கு சென்றது வரை அனைத்தையும் தனது வீடியோவில் சிவாங்கி காட்டியுள்ளார். மேலும், படுக்கையறை, பிரம்மாண்ட ஓப்பன் பாத்ரூம், கண்ணாடி டோர் வைத்த ஷவர் ரூம் உள்ளிட்டவற்றையும் சிவாங்கி காட்டியுள்ளார். இன்ஃபினிட்டி பூல் மற்றும் கீழே இறங்கினால் கடலில் குளித்து விட்டு மேலே வரும் வசதி என அனைத்தும் அந்த ரெசார்ட்டில் உள்ள நிலையில், அதையெல்லாம் படம் பிடித்து சிவாங்கி காட்டியுள்ளார். அடுத்த சில நாட்களுக்கு சோஷியல் மீடியாவில் சிவாங்கியின் மாலத்தீவு டூர் புகைப்படங்களும் வீடியோக்களும் வரிசைக் கட்டும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











