’குக் வித் கோமாளி’ இர்ஃபானுக்கு என்ன குழந்தை?.. பிறப்பதற்கு முன்பே பார்ட்டி வச்சு சொல்லிட்டாரே!
சென்னை: யூடியூபர் இர்ஃபான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இர்ஃபானுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்ற நிலையில், அவரது மனைவி ஆலியா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில், அவர் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தை என்பதை பார்ட்டி நடத்தி வீடியோவாக வெளியிட்டுள்ளார் இர்ஃபான்.
உலக அளவில் பல்வேறு நாடுகளுக்கு சென்று உணவுகளை ருசி பார்த்து இர்ஃபான் வியூ யூடியூப் சேனலில் ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு செலிபிரிட்டி ஆக வளம் வருகிறார் இர்ஃபான்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக இர்ஃபான் பங்கேற்றுள்ள நிலையில், அவருக்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் தடை: இந்தியாவில் குழந்தை பிறப்பதற்கு முன்னர் அந்தக் குழந்தையின் பாலினம் குறித்து ஸ்கேன் சென்டரில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தால் அந்த ஸ்கேன் சென்டரை இழுத்து மூடி சீல் வைத்து விடுவார்கள். அந்த மருத்துவருக்கும் மிகப்பெரிய தண்டனை உண்டு. ஆனால், வெளிநாடுகளில் என்ன குழந்தை வயிற்றில் வளர்கிறது என்பதை அறிவித்து விடுவார்கள்.
தடைக்கு என்ன காரணம்?: கருத்தம்மா உள்ளிட்ட படங்களில் பெண் பிள்ளைகள் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றி அவர்களை கொன்று விடும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். வயிற்றில் இருக்கும் போதே என்ன குழந்தை என்று தெரிந்து விட்டால் கருவை கலைத்து விடுவார்கள். இதனால், தாய்க்கும் சேய்க்கும் ஆபத்து இருப்பதால் இந்தியாவில் இது தடை செய்யப்பட்ட குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெண்டர் ரிவீல் பார்ட்டி: இந்நிலையில், தனக்கு பிறக்கப்போகும் குழந்தை என்ன குழந்தை என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் யூடியூபர் இர்ஃபான் துபாய்க்கு சென்ற நிலையில், அங்கே பாலினத்தை அறிந்துக் கொண்டு அதை அறிவிக்கும் நிகழ்ச்சியை பார்ட்டி போல கொண்டாடிய வீடியோவை தற்போது தனது யூடியூப் பக்கத்தில் இர்ஃபான் வெளியிட்டுள்ளார்.
குழந்தை பாலினம் அறிவிப்பு: இர்ஃபான் தனக்கு பெண் குழந்தை வேண்டும் என்றும் அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், பலூன்கள் சுடும் போட்டியை வைத்து யார் அதிக புள்ளிகள் பெறுகிறார்களோ அவர்களுக்கு வெற்றி என்கிற கணக்கில் கேம் எல்லாம் நடத்தப்பட்டது. அதன் மூலம் குழந்தையின் பாலினத்தை கடைசியாக ரிவீல் செய்துள்ளார். இதனால் அவருக்கு சிக்கல் வரும் வாய்ப்புகள் உள்ளதாக கூறுகின்றனர்.
பிக் பாஸ் மாயா: இந்த ஜெண்டர் ரிவீல் பார்ட்டியில் பிக் பாஸ் மாயாவும் பங்கேற்று இருந்தார். கோலாகலமாக நடைபெற்ற பார்ட்டியில் கடைசியாக தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிந்ததும் இர்ஃபான் ரொம்பவே எமோஷனலாக மாறி கண் கலங்கி விட்டார்.
குவியும் வாழ்த்துகள்: இர்ஃபான் தனக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போவதை அறிவித்துள்ள நிலையில், அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குக் வித் கோமாளி பிரபலங்கள் மற்றும் விஜய் டிவி ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











