பாரதி கண்ணம்மா செட்டில் புகுந்து கலாய்த்த குக் வித் கோமாளி பாலா... வேற லெவல் என்டர்டெயின்மெண்ட்

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3 இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இதையொட்டி குக் வித் கோமாளி டீம் பல பிரமோஷன் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.

இதையொட்டி நிகழ்ச்சியின் கோமாளி பாலா, பாரதி கண்ணம்மா செட்டில் புகுந்து அதகளம் செய்த நிகழ்வை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்களை வெகுவாக கட்டிப் போட்டது. குறிப்பாக இரண்டாவது சீசனில் குக்குகள் மற்றும் கோமாளிகள் இணைந்து ரசிகர்களை வெகுவாக என்டர்டெயின் செய்தனர்.

3வது சீசன் துவக்கம்

3வது சீசன் துவக்கம்

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்று முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இதுகுறித்த பல்வேறு பிரமோஷன்களை விஜய் டிவி கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து ஒளிபரப்பி வந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி இன்று முதல் துவங்கவுள்ளது.

பிரமோஷன் வீடியோக்கள்

பிரமோஷன் வீடியோக்கள்

இதையொட்டி பிரமோஷன் வீடியோக்களை விஜய் டிவி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது. குக் வித் கோமாளி... எங்கே சிரிக்காமல் நீ சமாளி என்ற வாசகங்களுடன் இந்த பிரமோ வீடியோ தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் பல பிரமோஷன் வீடியோக்களை கோமாளிகள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா செட்டில் பாலா

பாரதி கண்ணம்மா செட்டில் பாலா

இந்நிலையில் இந்த பிரமோஷனின் ஒரு பகுதியாக கோமாளி பாலா, பாரதி கண்ணம்மா செட்டில் புகுந்து அதகளம் செய்த வீடியோவையும் விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. பாரதி கண்ணம்மா செட்டிற்கு செல்லும் அவர், கண்ணம்மா மற்றும் பாரதியை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார்.

குவாரண்டைன் குழந்தை

குவாரண்டைன் குழந்தை

பாரதியை பார்த்து குவாரண்டைன் குழந்தை என்றும் கண்ணம்மாவை பார்த்து சீரியசுக்கு டிகிரி முடித்த ஆள் ஆயிற்றே இவர் என்றும் கலாய்க்கும் பாலா, தொடர்ந்து அவர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் வெற்றி பெறுகிறார். மேலும் அவர்களுக்கு சில டாஸ்க்குகளையும் அளிக்கிறார் பாலா.

வித்தியாச டாஸ்க்

வித்தியாச டாஸ்க்

வாயில் தண்ணீர் வைத்தபடி பாரதி பாடும் பாடலை கண்டுபிடித்து கண்ணம்மாவும் வாயில் தண்ணீர் வைத்தபடி அந்த பாடலை பாட வேண்டும் என்ற டாஸ்க்கை இருவரும் சிறப்பாக செய்கின்றனர். மாற்றி மாற்றி பாலா கொடுத்த டாஸ்கை அவர்கள் உற்சாகத்துடன் செய்து முடிக்கின்றனர்.

கூடியுள்ள எதிர்பார்ப்பு

கூடியுள்ள எதிர்பார்ப்பு

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புதிதாக மனோபாலா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளது நிகழ்ச்சிக்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே இந்த நிகழ்ச்சிக்காக காத்திருக்கின்றனர். பிரமோஷன் வீடியோக்களும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X