twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வாவ்.. செம.. சூப்பர்.. குக்கு வித் கோமாளியில் அசத்திய வனிதா விஜயகுமார்

    |

    சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சி, நேற்று பிற்பகல் 3:30 மணிக்கு ஒளிபரப்பானது. வனிதா விஜயகுமார் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் போன்று விதவிதமான டிஷ்கள் செய்து 2 லட்சம் ரூபாய் காசோலையுடன் டைட்டில் வின்னரானார்.

    ஒரு லட்சம் ரூபாய் காசோலையுடன் இரண்டாம் பரிசை உமா ரியாஸ் பெற்றார். குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பித்து சூப்பர் ஹிட் காமெடி ஷோவாக கலக்க ஆரம்பித்து, கடைசியில் வெற்றி கரமான குக்கரி ஷோவாகவும் முடிவடைந்தது.

    கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் ஷோ ஆரம்பிப்பதற்கு முன்னர் குக்கு வித் கோமாளியை ஆரம்பித்து முடித்து விட வேண்டும் என்று பிளான் செய்து துவங்கப்பட்ட குக்கு வித் கோமாளி, விஜய் டிவி பிளான் செய்த மாதிரியே முடிந்தது.

    வனிதா விஜயகுமார்

    வனிதா விஜயகுமார்

    வனிதா விஜயகுமார் சமையல் கலையை தனது மூன்றாவது குழந்தை வயிற்றில் இருந்தபோது தாய்லாந்தில் படித்ததாக கூறினார். ஃபினாலே நிகழ்ச்சியில், இவர் தாய்லாந்து சூப் மற்ற சில நாடுகளின் டிஷ், நைட்ரஜன் சேர்த்து உடனடி ஐஸ் க்ரீம் என்று அசத்தினார். எப்போதும் போல கிரியேட்டிவிட்டியுடன் கூடிய சமையல் மிக நீட்டான பிரசன்டேஷன் என்றும் ஜட்ஜஸ் பாராட்டி குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று அறிவித்தார்கள்.

    ரம்யா பாண்டியன்

    ரம்யா பாண்டியன்

    நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை இருந்த நடிகை ரம்யா பாண்டியன், இதற்கு முன்னர் அவ்வளவாக சமைத்தது கூட இல்லை என்று கூறினார். யூ டியூப் பார்த்து, இதுவரை மொத்தமே ஒரு 20 முறை சமைத்து இருப்பேன் என்று கூறிய ரம்யா பாண்டியன், நிகழ்ச்சியில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஃபினாலே வரை தாக்குப் பிடித்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் மூலம் அவர் லட்சக்கணக்கில் ரசிகர்களை பெற்றார் என்று கூற வேண்டும்.

    இக்கட்டுக்கு நடுவில்

    இக்கட்டுக்கு நடுவில்

    மொத்தம் மூன்று சமையல் போட்டிகள் என்று ஃபினாலே நடைபெற்றது. இதில் ஒவ்வொரு ரவுண்டில் ஒவ்வொரு டிவிஸ்ட் என்று வைத்து இருந்தார்கள். முதலில் குக்குகள் தங்களுக்கு கிடைத்த குல்லாவை மணி ஒலித்தவுடன் எந்த குக் தலையிலாவது போட வேண்டும். அப்போது அடுத்த மணி ஒலிக்கும் வரை அந்த குல்லா போட்டுக்கொண்ட குக் அசையாமல், பேசாமல் நின்று கோமாளிகளுக்கு கண்ணால் இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்க வேண்டும் என்று. இதில் குக்குகள் சொல்படி கோமாளிகள் சமைக்க வேண்டும். குக்குகள் ஆட்டுக் கல்லில் மாவு அரைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

    அடுத்த டிவிஸ்ட்

    அடுத்த டிவிஸ்ட்

    அடுத்த டிவிஸ்ட் என்று, கோமாளிகள் காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாட்டு கேட்டுக்கொண்டே, குக்குகள் தரும் இஸ்னட்ரக்ஷனில் சமைக்க வேண்டும்.. இதே போல சமைத்தே கோமாளிகள் அந்த ரவுண்டை முடித்தார்கள். கடைசியில் இருக்கும் வேலைகளை செய்து பிரசன்டேஷன் மட்டுமே குக்குகள் செய்தார்கள். கடைசி ரவுண்டு வரை அப்படித்தான் நடந்தது. ஆனால் கடைசியில் 20 நிமிஷம் குக்குகள் செய்யலாம் என்று சொல்ல, அப்போதுதான் குக்குகள் தங்கள் திறமையை காண்பிக்க முடிந்தது.

    வனிதாவின் 2ண்ட் இன்னிங்ஸ்

    வனிதாவின் 2ண்ட் இன்னிங்ஸ்

    வனிதா விஜய் டிவியின் பிக் பாஸ் 3 சீசனில் கலந்துக் கொண்ட பின்னர் அவருக்கான ஒரு இடத்தை விஜய் டிவி அவ்வப்போது வழங்கி வருகிறது. இதைத் தவிர வெளி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என்று அவர் நடித்து வருவதாகவும் தெரிகிறது. விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு 9 சீசனில் ஒரு ஜட்ஜாகவும் கலந்துக்கொள்ள இருக்கிறார். பார்க்கப் போனால் அவரின் 2ண்ட் இன்னிங்ஸ் அவருக்கு நன்றாகவே கைக்கொடுத்து வருகிறது. அவரது குடும்பத்தில் நிறைய சம்பாதிக்கும் விதத்தில் வனிதா விஜயகுமார் முதலிடத்துக்கு வந்து விடுவார் போலும்.

    English summary
    The Grand Finale of Vijay TV's cook With comali premiered yesterday at 3:30 pm. Vanitha Vijayakumar made a variety of dishes like Five Star Hotel and won the title with a check of Rs 2 lakh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X