சும்மா சொல்லக் கூடாது.. குக்கு வித் கோமாளி செம ஷோ.. பிரமாண்ட ஹிட்.. பெரிய வெற்றி!
சென்னை: விஜய் டிவியின் குக்கு வித் கோமாளி ரியாலிட்டி ஷோ, வழக்கமான குக்கரி ஷோக்களை ஒப்பிடும்போது பிரமாண்டம்தான். விஜய் டிவியின் நல்ல மெனக்கெடல் என்று பாராட்டலாம். சரியா 13 வாரம் என்று பிளான் செய்து இப்போது ஃபைனல் வந்து இருக்கிறது.
வரும் வாரம் ஞாயிறு பகல் 3:30 மணிக்கு கிராண்ட் ஃ பினாலே ஒளிபரப்பாக இருக்கிறது. 3 மணி நேரம் தொடர்ந்து ஒளிபரப்பாக இருக்கிறது குக்கு வித் கோமாளி சமையல் போட்டி நிகழ்ச்சி. சமையல் போட்டியில் காமெடி எனும்போது புதுசா யோசிச்சு இருக்காங்க.
கோமாளிகள் என்று சமையல் அறை பக்கமே போகாதவர்களை வைத்து, சமையல் கலை நிபுணர்களுடன் சேர்த்து டாஸ்க் வித் சமையல் எனும்போது நிறைய வேடிக்கையான நிகழ்வுகள் அரங்கேறும் என்று யோசித்தமைக்கே பாராட்ட வேண்டும்.

ஃபிரஷ் காமெடி
ஒவ்வொரு வாரமும் சனி ஞாயிறுகளில் குக்கு வித் கோமாளியில் ஒரு ஃ பிரஷ் காமெடி ஷோ அரங்கேறும். இந்த காமெடியை மறுபடி பார்க்க முடியாது என்று ஹாட் ஸ்டாரில் பார்த்து மகிழ்ந்தவர், இன்னும் பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் அதிகம். டிவி சானல்களில் சீரியல்கள் ராஜ்ஜியம், முழுக்க முழுக்க சீரியஸ்.. டிராஜடி என்று பார்த்து சலித்த மக்களுக்கு இது புதிய பொழுது போக்கு அம்சமாக இருந்து வருகிறது.

பிரமாண்ட குக்கரி ஷோ
குக்கு வித் கோமாளி பிரமாண்ட குக்கரி ஷோ என்றுதான் சொல்ல வேண்டும். பெரிய செட், அதில் தேவையான பொருட்கள் வைக்க ஒரு அறை , கோமாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்னர் அவர்கள் சேர்ந்து நிற்க ஒரு அறை. குக்கரி ஷோ நடத்த அதற்கு செட்டப்பா ஒரு பெரிய ஹால்.. அங்கே ஜட்ஜஸ் நிற்க இடம் என்று பெரிய செட்...லைட்ஸ்...

ஓடவும் ஒளியவும் முடியாது
நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் அனைவரும் எங்கு போனாலும், எங்கு நின்றாலும் என்ன செய்கிறார்கள் என்று தெரியும்படி அத்தனை இடங்ககளிலும் காமிராக்கள். பிக்பாஸ் ஷோவில் சொல்வது போல் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சொல்லும்படி அத்தனை கேமிரா கண்களிலும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்பவர்கள் மாட்டியேத் தீருறார்கள்.

காமெடி கோபம்
கோமாளிகள் மீது சமையல் போட்டியாளர்கள் கோபம் கொள்வது, எதுவும் தெரியாமல் கோமாளிகள் செய்வது காமெடியாக முடிவது என்று ஷோவில் இப்படியானவை திட்டமிட்டு நடக்கவில்லை. ஆனால், ரம்யா பாண்டியனிடம் எப்படி எல்லாம் விதம் விதமாக ஜொள்ளு விடுவது என்பது மட்டும்தான் திட்டமிட்டு நடந்தது என்று ஹானஸ்டாக சொல்லலாம். மற்றவை குக்கு வித் கோமாளி கிராண்ட் ஃ பினாலேவில்.


Click it and Unblock the Notifications











