"தாங்க முடியாத அளவுக்கு Stress".. ஒரே எபிசோடில் வாழ்க்கையை மாற்றிய குக் வித் கோமாளி !
சென்னை : தாங்க முடியாத அளவுக்கு மன அழுத்தத்தில் இருந்தேன், என் வாழ்க்கையை குக் வித் கோமாளி நிகழ்ச்சி மாற்றிவிட்டதாக ஒரு ரசிகை தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் டாப் லிஸ்டில் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
முதல் 2 சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து சீசன் 3 தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

குக் வித் கோமாளி 3
குக் வித் கோமாளி 3வது சீசன் போட்டியாளர்களாக அம்மு அபிராமி, கிரேஸ் கருணாஸ், ராகுல் தாத்தா, வித்யுலேகா, ரோஷினி, தர்ஷன், அந்தோணி தாஸ், சந்தோஷ் பிரதாப் , ஸ்ருதிக்கா ஆகியோர் களம் இறங்கினர். ஆரம்பம் முதலே கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் இந்த சீசனில் புகழ் மட்டும் அடிக்கடி மிஸ் ஆகிவிடுகிறார். ஆனால் அவரின் இடத்தை குரேஷி மற்றும் பாலா நிரப்பி வருகின்றனர்.

அடிக்கடி சர்ச்சை
குக் வித் கோமாளி 2 சீசன்களை விடவும் இந்த சீசன் சற்று அதிகமாகவே சர்ச்சையில் சிக்கியதும். அதே போல் இந்த சீசனில் ஃபைனல்ஸூக்கு முன்பே சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், ஆர்.ஜே பாலாஜி ஆகியோர் வந்து சென்றுள்ளனர். மிகப் பெரிய பீக்கில் சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
Recommended Video

மன அழுத்தத்தில் இருந்தேன்
இந்நிகழ்ச்சியின் முக்கிய கோமாளியான குரேஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் எழுதிய உருக்கமாக கடிதத்தை பகிர்ந்துள்ளார். அதில், அண்ணா இந்த விஷயத்தை நான் சொல்லியே ஆகனும், நீங்க இதுக்கு ரிப்ளே பண்ணுவீங்களானு எனக்கு தெரியாது. ஆனால் சில நாட்களான நான் மிகவும் மன அழுத்தத்தில் இருந்தேன். எனக்கு என்ன பண்றதுனே தெரியல அந்த நேரத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் பார்த்தேன்.

100 முறைபார்த்துவிட்டேன்
அந்த எபிசோடில் நீங்க ஸ்ருதிகா மாதிரி பேசுன டையலாக் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு, இந்த எபிசோடையே கிட்டத்தட்ட 100முறை பார்த்துவிட்டேன் இன்னும் பார்த்துக்கொண்டே இருக்கிறேன் ரொம்ப தேங்க்ஸ் ப்ரோ சிக்கிரம் உங்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று, ரொம்ப எமோஷனலான ஒரு பதிவை பதிவிட்டு இருந்தார். அந்த பதிவை குரேஷி இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து எல்லாத்தும் காரணம் ஸ்ருதிகா தான் கூறியுள்ளார். இணையத்தில் இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











