Don't Miss!
- News
பணம் வீணாகக் கூடாது..பட்ஜெட்டுக்கு முன் விரைவாக முடிங்க..அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
- Finance
Mukesh Ambani: மீண்டும் முதல் இடம்.. ஒரு வருட கௌதம் அதானி ஆதிக்கம் முடிந்தது.. 16வது இடம்..!
- Sports
ஐபிஎல் தொடரால் ஆபத்து.. இந்திய அணியா? ஐபிஎல் அணியா எது முக்கியம்.. ரவி சாஸ்திரி கொடுத்த எச்சரிக்கை
- Lifestyle
உங்க பிறந்த தேதி 8,17 மற்றும் 26 இதுல ஒன்னா? அப்ப உங்க எதிர்காலம் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
- Automobiles
சான்ஸே இல்ல... ஃபார்முலா 1 கார்களின் டயர்கள் அதன்பின் இதற்கு யூஸ் பண்ண படுகிறதா!! யாராலயும் யூகிக்கவே முடியாது
- Technology
இலவச Jio True 5G இனி கடலூர், திண்டுக்கல் உட்பட மொத்தம் 8 நகரங்களில்.! உங்க ஊர் இதில் உள்ளதா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
காஸ்ட்லி பைக்கை திருட்டு கொடுத்த குக் வித் கோமாளி பிரபலம்...ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
சென்னை : கஷ்டப்பட்டு வாங்கிய காஸ்ட்லி பைக் திருடு போய் விட்டதாக குக் வித் கோமாளி பிரபலம் சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்காக ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
Recommended Video
விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டு சீசன்களை நிறைவு செய்து, தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காமெடி கலந்த சமையல் நிகழ்ச்சி என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஃபேன்ஸ் அதிகம்.
என் Wife தான் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்... மனம் திறந்த விஜய் ஆண்டனி!

குக் வித் கோமாளி பிரபலம்
குக் வித் கோமாளியில் போட்டியாளர்களை விட கோமாளிகள் தான் அதிக பாப்புலர். அப்படி பாப்புலரான கோமாளிகளில் ஒருவர் தான் மணிமேகலை. இவர் சன் டிவி, சன் மியூசிக் ஆகியற்றில் தொகுப்பாளராக இருந்து, தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி உள்ளார். விஜய் டிவி.,யில் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பைக் திருட்டு போச்சு
மணிமேகலையும் அவரது கணவர் ஹுசைனும் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள். அதோடு சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்கும் மணிமோகலை தனது போட்டோக்கள், ரீல் வீடியோக்கள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று, தங்களின் காஸ்ட்லி பைக் திருடு போய் விட்டதாக அவர் இன்ஸ்டாகிராமில் போட்டோவுடன் பதிவிட்டிருந்தார்.

கஷ்டப்பட்டு சம்பாதிச்சது
அதில், அதிகாலை எங்களின் பைக் திருடு போய் விட்டது. அசோக் நகர் அருகே நண்பரின் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது காணாமல் போய் உள்ளது. திருமணத்திற்கு பிறகு கஷ்டப்பட்டு சம்பாதிச்சு, ஆசையா வாங்கின ஃபர்ஸ்ட் பைக். மிகவும் கவலையாக உள்ளது. வருஷத்துக்கு ஒரு சம்பவம் எங்க இருந்து தான் வருதோ என பதிவிட்டுள்ளார். மேலும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து, தானும் தனது கணவரும் பைக்குடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை பதிவிட்டிருந்தார்.

ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்
இதை பார்த்த ரசிகர்கள், கவலைப்படாதீர்கள் என பலரும் ஆறதல் கூறு வருகிறார்கள். நல்லதே நடக்கும். கஷ்டப்பட்டு சம்பாதித்தது வீணாகாது. நிச்சயம் உங்கள் பைக் திரும்ப கிடைக்கும். கஷ்டப்பட்டு வந்தது அவ்வளவு சீக்கிரம் போகாது. பாசிடிவாக இருங்கள் என கமெண்ட் செய்துள்ளனர்.