twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிக்க வைத்த கோமாளிகள் ஏன் அழுகிறார்கள்…வெளியேறுகிறாரா தாமு ?

    |

    சென்னை : வயிறு வலிக்க அனைவரையும் சிரிக்க வைத்த குக்வித் கோமாளிகள் ஒட்டுமொத்தமாக கதறி அழும் வீடியோ வெளியாகி உள்ளது.

    எப்போதும் ஜாலியாக கலப்புடன் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரும் அழுவதை பார்த்த ரசிகர்களும் பதறிபோய் உள்ளனர்.

    உண்மையில் என்ன விவகாரம்? என்பது வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தான் தெரிய வரும்.

    ராக் வித் ராஜா.. சென்னை தீவுத் திடலில் இளையராஜாவின் இசை கச்சேரி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!ராக் வித் ராஜா.. சென்னை தீவுத் திடலில் இளையராஜாவின் இசை கச்சேரி.. உற்சாகத்தில் ரசிகர்கள்!

    விஜய் தொலைக்காட்சி

    விஜய் தொலைக்காட்சி

    ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புது புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது. இதில், புகழ், சிவாங்கி, மணிமேகலையின் அட்டகாசம் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும்.

    ஒரே அலப்பறை

    ஒரே அலப்பறை

    விஜய் டிவில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலை என நினைக்க வைத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே கோமாளிகள் தான். குக்குகள் சமைக்க, கோமாளிகள் அதை கெடுக்க நிகழ்ச்சி முழுவதும் ஒரே அலப்பறை அட்டகாசம் தான்.

    குக் வித் கோமாளி சீசன் 3

    குக் வித் கோமாளி சீசன் 3

    குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு வெற்றி பெற்றது., தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து மனோபாலா, ராகுல் தாத்தா வெளியேறிய நிலையில், கடந்த வாரம் அந்தோணி தாஸ் வெளியேறியுள்ளார்.

    கண்கலங்கும் தாமு

    கண்கலங்கும் தாமு

    இந்நிலையில்,கலகலப்பாக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அனைவரும் கண்ணீர் விட்டபடி சோகத்தில் இருக்கின்றனர். செஃப் தாமு " I love you so much, All of you" என கண்ணீர் மல்க கூறுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னது செஃப் தாமு நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

    English summary
    Cook with comali season 3 Chef Dhamu crying, குத் வித் கோமாளி சீசன் 3, செஃப் தாமு அழுதார். தாமு நிகழ்ச்சியை விட்டு வெளியேறுகிறாரா?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X