Don't Miss!
- News
நேற்று உதய்பூர் கொலையாளி, இன்று காஷ்மீர் பயங்கரவாதி! அடுத்தடுத்து அடிபடும் பாஜக பெயர் -நடந்தது என்ன?
- Sports
இங்கிலாந்தை நாக் அவுட்டாக்கிய சிராஜ்.. பலமான நிலையில் இந்திய அணி.. வெற்றி வாய்ப்பு எப்படி?
- Finance
இட்லி விற்றவர் இன்று லட்சங்களில் வருமானம்.. சாதனை படைத்த தேன்மொழி..!
- Technology
முதல் மேட்-இன்-இந்தியா ஆட்டோனோமாஸ் விமானத்தை உருவாக்கி சோதனை! அதிகரிக்கும் தாக்குதல் சக்தி
- Automobiles
ஹிமாலயன் பைக்கை வாங்கும் ப்ளான் வெச்சிருக்கீங்களா? புதியதாக வந்துள்ள இந்த 2 நிறத்தேர்வுகளையும் பாருங்க!!
- Lifestyle
வார ராசிபலன் 03.06.2022-09.07.2022 - இந்த வாரம் திருமண வாழ்வில் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.....
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சிரிக்க வைத்த கோமாளிகள் ஏன் அழுகிறார்கள்…வெளியேறுகிறாரா தாமு ?
சென்னை : வயிறு வலிக்க அனைவரையும் சிரிக்க வைத்த குக்வித் கோமாளிகள் ஒட்டுமொத்தமாக கதறி அழும் வீடியோ வெளியாகி உள்ளது.
எப்போதும் ஜாலியாக கலப்புடன் இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அனைவரும் அழுவதை பார்த்த ரசிகர்களும் பதறிபோய் உள்ளனர்.
உண்மையில் என்ன விவகாரம்? என்பது வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் தான் தெரிய வரும்.
ராக்
வித்
ராஜா..
சென்னை
தீவுத்
திடலில்
இளையராஜாவின்
இசை
கச்சேரி..
உற்சாகத்தில்
ரசிகர்கள்!

விஜய் தொலைக்காட்சி
ரியாலிட்டி ஷோக்கள் முதல் சீரியல்கள் வரை தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது விஜய் தொலைக்காட்சி. தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப புது புது தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களின் மனதை கவர்ந்த நிகழ்ச்சியாக உள்ளது. இதில், புகழ், சிவாங்கி, மணிமேகலையின் அட்டகாசம் அனைவரும் ரசிக்கும் படி இருக்கும்.

ஒரே அலப்பறை
விஜய் டிவில் இந்த நிகழ்ச்சி தொடங்கிய போது சமையல் நிகழ்ச்சியில் கோமாளிக்கு என்ன வேலை என நினைக்க வைத்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே கோமாளிகள் தான். குக்குகள் சமைக்க, கோமாளிகள் அதை கெடுக்க நிகழ்ச்சி முழுவதும் ஒரே அலப்பறை அட்டகாசம் தான்.

குக் வித் கோமாளி சீசன் 3
குக் வித் கோமாளி முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இரண்டாவது சீசன் ஒளிபரப்பப்பட்டது. இரண்டு சீசன்களுமே ரசிகர்கள் மத்தியில் வேற லெவலுக்கு வெற்றி பெற்றது., தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி பட்டையக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.10 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியிலிருந்து மனோபாலா, ராகுல் தாத்தா வெளியேறிய நிலையில், கடந்த வாரம் அந்தோணி தாஸ் வெளியேறியுள்ளார்.

கண்கலங்கும் தாமு
இந்நிலையில்,கலகலப்பாக மக்களை சிரிக்க வைத்துக் கொண்டு இருக்கும் இந்த நிகழ்ச்சியிலிருந்து செஃப் தாமு வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் அனைவரும் கண்ணீர் விட்டபடி சோகத்தில் இருக்கின்றனர். செஃப் தாமு " I love you so much, All of you" என கண்ணீர் மல்க கூறுகிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் என்னது செஃப் தாமு நிகழ்ச்சியை விட்டு விலகுகிறாரா என கேள்வி கேட்டு வருகின்றனர்.