For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹாட் ஸ்டாரில் வந்தாச்சு குக் வித் கோமாளி 3...இன்னிக்கு என்ன நடக்க போகுது தெரியுமா?

  |

  சென்னை : விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று குக் வித் கோமாளி. காமெடி கலந்த இந்த வித்தியாசமான சமையல் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்கள் ரசிகர்களின் பெரிய ஆதரவுடன் வெற்றி பெற்றது.

  முதல் சீசனில் வனிதா விஜயக்குமாரும், இரண்டாவது சீசனில் கனியும் டைட்டில் வென்றனர். பிக்பாஸ் ஷோவில் கலந்து கொள்பவர்கள் எப்படி பிரபலமாகி, சினிமா வாய்ப்பு கிடைத்து பிஸியாகி விடுகிறார்களோ அதே போல் குக் வித் கோமாளியில் கலந்து கொண்டவர்களும் பிரபலமாகி, சினிமா வாய்ப்புக்களை அதிகம் பெற்று வருகிறார்கள்.

  மேனேஜரை நீக்கிய யோகி பாபு... காரணம் என்ன... அவரே வெளியிட்ட ஆடியோ மேனேஜரை நீக்கிய யோகி பாபு... காரணம் என்ன... அவரே வெளியிட்ட ஆடியோ

  சினிமாவில் பிஸியான பிரபலங்கள்

  சினிமாவில் பிஸியான பிரபலங்கள்

  அஸ்வின், புகழ், சிவாங்கி, பவித்ர லட்சுமி, தர்ஷா குப்தா போன்றவர்கள் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவில் நிறைய வாய்ப்புகளுடன் கலக்கி வருகிறார்கள். அஸ்வின் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த என்ன சொல்ல போகிறாய் படம் தியேட்டர்களில் ரிலீசாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இவரைப் போல் புகழ், விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை, சந்தானத்துடன் சபாபதி என பல படங்களில் காமெடியில் பின்னியெடுத்து வருகிறார்.

  குக் வித் கோமாளி 3 ஆரம்பமாயிடுச்சு

  குக் வித் கோமாளி 3 ஆரம்பமாயிடுச்சு

  முதல் இரண்டு சீசன்களின் வெற்றியை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 3, புதிய போட்டியாளர்களுடன், புதிய முறையில் கலக்கலாக துவங்கப்பட்டுள்ளது. ஜனவரி 22 ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. வழக்கம் போல் இந்த சீசனிலும் செஃப்ஸ் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் நடுவர்களாக இருக்க உள்ளனர். ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார்.

  குக்கும் கோமாளிகளும்

  குக்கும் கோமாளிகளும்

  இந்த சீசனின் போட்டியாளர்களாக அம்மு அபிராபி, ஆன்டனி தாசன், தர்ஷன், கிரேஷ் கருணாஸ், மனோபாலா, ரோஷினி ஹரிபிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருதிகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ராகுல் தாதா ஆகிய 10 பேர் கலந்து கொண்டுள்ளனர். கோமாளிகளாக பரத் கே.ராஜேஷ், வெட்டுக்கிளி பாலா, குரேஷி, மணிமேகலை, மூக்குத்தி முருகன், சக்தி ராஜ், ஷீத்தல் கிளாரின், சிவாங்கி, சுனிதா கோகாய், அதிர்ச்சி அருண் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

  ஹாட்ஸ்டாரில் வந்தாச்சு

  ஹாட்ஸ்டாரில் வந்தாச்சு

  ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த குக் வித் கோமாளி சீசன் 3 நேற்று துவங்கப்பட்டது. முதல் நாளான நேற்று போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் பற்றிய அறிமுகம் நடைபெற்றது. மொத்தம் 70 எபிசோட்களை கொண்ட இந்த நிகழ்ச்சியின் முதல் எபிசோட் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய எபிசோட் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களை கவருவதற்காக, வழக்கமாக சீரியல்களை போன்ற இன்றைய எபிசோட்டையும் சேர்த்தே ஹாட் ஸ்டாரில் வெளியிட்டுள்ளனர்.

  இன்றைக்கு என்ன நடக்கும்

  இன்றைக்கு என்ன நடக்கும்

  இன்றைய எபிசோடிலும் போட்டியாளர்களின் அறிமுகம், மனோபாலாவின் காமெடி போன்றவைகள் தொடர உள்ளன. ஏராளமான ரசிகர்கள் இதனை ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். ஏற்கனவே நேற்று முன்தினம் ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்ட அகண்டா தெலுங்கு படத்தையே 24 மணி நேரத்திற்குள் 1 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பார்த்து சாதனை படைத்துள்ளனர். இதில் சினிமாவிற்கு போட்டியாக ரியாலிட்டி ஷோக்களையும் முன்கூட்டியே ஹாட்ஸ்டாரில் ஹாட்டாக வெளியிட்டு வருகின்றனர். இது ஹாட்ஸ்டார் வாடிக்கையாளர்களுக்கு டபுள் தமாக்காவாக அமைந்துள்ளது.

  English summary
  Season 3 of Cook with Comali premiered yesterday.The first and second episodes of this show are available on Disney Plus and Hotstar.Fans celebrate this double dhamakka.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X