டிஷ் பேரை போகஸ் செய்யவில்லை.. பரத் சொன்ன விளக்கம்.. காண்டான நடுவர்!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி ரசிகர்களை கவர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முதலில் நடைபெற்ற அட்வான்டேஜ் ரவுண்டில் அம்மு அபிராமியும் அடுத்த காம்போ ரவுண்டில் ஸ்ருதிகாவும் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது ரவுண்ட்டாக ட்ரீம் காம்போ ரவுண்ட் நடைபெற்றது. இதற்காக 1.45 நிமிடங்கள் அளிக்கப்பட்டன. இந்த ரவுண்டுக்கு முன்னதாக கோமாளிகள் தங்களது கெட்டப்பை சிறப்பாக மாற்றிக் கொண்டு அசத்தினர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறப்பான பல டாஸ்க்குகளுடன் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. சிறப்பான வகையில் ஒளிபரப்பாகிவரும் இந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக கண்டு களித்து வருகின்றனர். பிற்பகல் 3 மணியிலிருந்து நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.

3 ரவுண்டுகள்

3 ரவுண்டுகள்

3 ரவுண்டுகளுடன் குக்குகளுக்கு டாஸ்க்குகள் அமைக்கப்பட்டன. வித்தியாசமான டிஷ்களை கொடுத்த குக்குகளுக்கு உடனுக்குடன் சிறப்பான பாராட்டுக்கள் குவிந்தன. முதல் ரவுண்டில் சாக்லெட் சாஸ் மற்றும் ஜாங்கிரி மாவுடன் கொடுக்கப்பட்ட டாஸ்க்கை அம்மு அபிராமி சிறப்பாக முதலில் முடித்து வென்றார்.

அடுத்தடுத்த ரவுண்ட்கள்

அடுத்தடுத்த ரவுண்ட்கள்

இரண்டாவதாக 3 பொருட்களுடன் 1.15 நிமிடங்களுக்கு டிஷ்களை செய்து அசத்தினார் ஸ்ருதிகா. இந்த ரவுண்டில் இவர்தான் வெற்றி பெற்றார். இதற்கு காம்போ டாஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. மூன்றாவதாக ட்ரீம் காம்போ டாஸ்க் என்ற பெயரில் 1.45 நிமிடங்களுக்கு 2 வித்தியாசமான டிஷ்களை சமைக்க அறிவுறுத்தப்பட்டது.

பாவமான குக்குகள்

பாவமான குக்குகள்

இதில் குக்குகள் நிலைமைதான் மிகவும் பாவம். அவர்கள் கையில் மரக்கட்டையிலான வடிவத்தை தாங்கிப் பிடித்தபடி கோமாளிகளுக்கு இன்ஸ்ட்ரக்ஷன்களை கொடுத்து சமைக்க வைத்தனர். தொடர்ந்து ஸ்பெஷல் கோமாளியாக மாறிய சுனிதா, குக்குகளுக்கு குரங்கு முகமுடியை வைத்து வெறுப்பேற்றினார்.

நடுவரை கடுப்பேற்றிய பரத்

நடுவரை கடுப்பேற்றிய பரத்

நிகழ்ச்சியின் இடையில் கோமாளி பரத்திடம் டிஷ்ஷின் பெயரை கேட்டார் நடுவர் வெங்கடேஷ் பட். ஆனால் தான் டிஷ்ஷின் தரத்தில்தான் போகஸ் செய்ததாகவும் பெயரில் இல்லை என்றும் கூறி காண்டேற்றினார் பரத். இதையடுத்து அங்கிருந்து கடுப்புடன் அடுத்த போட்டியாளரிடம் சென்றார் வெங்கடேஷ் பட்.

சுவாரஸ்யங்களின் சங்கமம்

சுவாரஸ்யங்களின் சங்கமம்

இதுபோன்ற பல சுவாரஸ்யங்கள் இந்த நிகழ்ச்சியில் காணப்பட்டது. எப்போதும் வித்தியாசமான கெட்டப்புடன் வரும் கோமாளிகள், இந்த நிகழ்ச்சியிலும் முதல் பாதியில் அதேபோல வந்தனர். தொடர்ந்து மூன்றாவது ரவுண்டிற்கு முன்னதாக இறுதிப்போட்டியை எதிர்கொள்ளும்வகையில அவர்கள் தங்களது கெட்டப்பை மாற்றி காணப்பட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X