கிரேஸ் ட்ரஸ்ஸை கிழித்துவிட்ட கோமாளிகள்... குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புலம்பிய கிரேஸ்

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக இன்றைய தினம் ஒளிபரப்பாக உள்ளது.

இதையொட்டி அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறது.

இன்றைய பிரமோவில் கிரேஸ் புலம்பிய காட்சிகளை காண முடிந்தது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் சிறப்பான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது. கடந்த இரு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசனை இந்த நிகழ்ச்சி துவங்கியுள்ளது. கடந்த இரு சீசன்களை ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த நிகழ்ச்சி தற்போது இரண்டாவது வாரமாக துவங்கி நடைபெற்று வருகிறது.

புதிய குக்குகள்... கோமாளிகள்

புதிய குக்குகள்... கோமாளிகள்

இந்த புதிய சீசனில் புதிய குக்குகளையும் கோமாளிகளையும் காண முடிகிறது. ஆனால் அதே செஃப்களே காணப்படுகின்றனர். செப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியின் செஃப்களாக உள்ளனர். நிகழ்ச்சியை தர்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார்.

நிகழ்ச்சியில் புதுமுகங்கள்

நிகழ்ச்சியில் புதுமுகங்கள்

நிகழ்ச்சியின் ரோஷினி, அந்தோணி தாசன், ஸ்ருதிகா, கோபி உள்ளிட்ட புதுமுகங்களை காண முடிகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த வாரத்தில் துவங்கிய நிலையில், முதல் வாரத்தில் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்திய நிகழ்வு காணப்பட்டது.

இரண்டாவது வாரமாக ஒளிபரப்பு

இரண்டாவது வாரமாக ஒளிபரப்பு

தொடர்ந்து குக்கிங்கையும் போட்டியாளர்கள் மேற்கொண்டனர். இந்நிலையில் இன்றைய தினம் இரண்டாவது வாரமாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இதையொட்டி விஜய் டிவி புதிய புதிய பிரமோக்களை ஒளிப்பரப்பி வருகிறது.

வெங்கடேஷ் பட்டின் சேட்டை

வெங்கடேஷ் பட்டின் சேட்டை

இதில் கோமாளிகளின் வேலையை செப் வெங்டேஷ் பட் மேற்கொண்டு வருவதை பார்க்க முடிந்தது. அவர் கோபி உள்ளிட்ட கோமாளிகளை துரத்தி துரத்தி சேட்டை செய்வதையும் காண முடிந்தது. கொம்பை வைத்து அவர் கோமாளிகளை துரத்துவது வேடிக்கையாக அமைந்தது.

புதிய பிரமோ

புதிய பிரமோ

இந்நிலையில் இன்று வெளியிடப்பட்டுள்ள புதிய பிரமோவில் கிரேஸ் அணிந்திருந்த ஆடையை கோமாளிகள் கிழித்ததையும் அதையொட்டி அவர் புலம்பியதையும் பார்க்க முடிந்தது. தொடர்ந்து அவர் தனது குக்கின் தமிழை கலாய்த்ததையும் காண முடிந்தது.

Recommended Video

Cook with Comali Set-ல் Pugazh | ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
காமெடிக்கு உத்தரவாதம்

காமெடிக்கு உத்தரவாதம்

கடந்த சீசன்களை போலவே இந்த சீசனும் காமெடிக்கு உத்தரவாதம் தரும் வகையில் அமைந்துள்ளது. இதையொட்டி வார இறுதியில் ரசிகர்களுக்கு சிறப்பான என்டர்டெயின்மெண்டும் உறுதியாகி உள்ளது. இந்த சீசன் 70 எபிசோடுகளுடன் களமிறங்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X