Cook with Comali : மாஸா என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன்…குஷியில் ரசிகர்கள் !
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 3ன் ஒவ்வொரு எபிசோடும் வேறலெவல் ரகம் தான். போன வாரம், செஃப் தாமுவாக மாறிய ஷிவாங்கி, ஸ்ருத்திகா கெட்டப்பில் குரோஷி என அதிரிபுதிரி காம்பினேஷனில் பட்டையை கிளப்பி இருந்தனர்.
Recommended Video
தற்போது குக்வித் கோமாளி சீசன் 3 புது ப்ரோமோவை விஜய்தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3
குக் வித் கோமாளி முதல் மற்றும் இரண்டாவது சீசனுக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பு சீசன் 3க்கு ஒருபடி மேலேயே கிடைத்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் போட்டியாளர்களாக அம்மு அமிராமி, கிரேஸ் கருணாஸ், தர்ஷன், பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி ஹரிப்பிரியன், சந்தோஷ் பிரதாப், ஸ்ருத்திகா அர்ஜுன், வித்யுலேகா ராமன், ஆகியோரும், கோமாளிகளாக பாலா, குரேஷி, மணிமேகலை, சிவாங்கி, மூக்குத்தி முருகன், சுனிதா, அதிர்ச்சி அருண், சக்தி ராஜ், பரத் கே ராஜேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வித்தியாசமான கான்ச்செப்டு
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஸ்பெஷலே கோமாளிகள் செய்யும் கலாட்டாக்களும், காமெடிகளும் தான். நிகழ்ச்சியின் சுவாரசியத்தை கூட்டும் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் வாரா வாரம் கோமாளிகளுக்கு விதவிதமான கெட்டப்புகளை கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் அசத்தி வருகின்றனர். எப்படிடா கான்ச்செப்டுகளை யோசிக்கிறீர்க என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வொரு எபிசோடும் வேறலேவலில் இருக்கிறது.

வைல்டு கார்டு என்ட்ரி
பிரபல காமெடியன் சுட்டி அரவிந்த், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த வேட்டை முத்துக்குமார் வைல்டு கார்டு போட்டியாளர்களாக உள்ளே நுழைந்துள்ளனர். ராகுல் தாதா, மனோபாலா, அந்தோணிதாசன்,சந்தோஷம் பிரதாப் ஆகியோர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளனர்.

சிறப்பு விருந்தினர்
இந்நிலையில், வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இந்த குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவகார்த்திகே மற்றும் பிரியங்கா மோகனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர். இந்த ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதில் வெங்கடேஷ் பட் பூங்கொத்து கொடுத்து சிவகார்த்திகேயனை வரவேற்கிறார். கோமாளி குரோஷி சிவகார்த்திகேயன் போல பேசி அசத்துகிறார். இந்த நிகழ்ச்சி வரும் வாரம் 14 மற்றும் 15ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications