வெளியானது குக் வித் கோமாளியின் புதிய பிரமோ... கலக்கல் ரோஷினி டான்ஸ் அள்ளுதே

சென்னை : பரபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து அடுத்தடுத்த தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளை விஜய் டிவி களமிறக்கி வருகிறது.

இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி வரும் 22ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி

நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் பிரம்மாண்டமான அளவில் நிறைவடைந்துள்ளது. 3 மாதங்களுக்கும் மேலாக ரசிகர்களை கட்டிப் போட்ட இந்த நிகழ்ச்சி அடுத்த ஆண்டு தான் மீண்டும் துவங்கும் என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றமான விஷயம்தான்.

வெற்றி பெற்ற ராஜூ

வெற்றி பெற்ற ராஜூ

பிக் பாஸ் சீசன் 5ன் வெற்றியாளராகியுள்ளார் ராஜூ. இவருக்கும் இந்த நிகழ்ச்சி ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ள நிலையில், முந்தைய சீசன்களில் வெற்றி பெற்றவர்களை போலவே இவரும் அடுத்ததாக திரையில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்தடுத்த தொடர்கள்

அடுத்தடுத்த தொடர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி கலக்கலான அனுபவத்தை ரசிகர்களுக்கு தினந்தோறும் இரவு 10 முதல் 11 மணிவரை அளித்து வந்த நிலையில், தற்போது அந்த ஸ்லாட்டில் அடுத்ததாக இரண்டு மெகாத் தொடர்களை களமிறக்கியுள்ளது விஜய் டிவி. இதேபோல நீண்ட எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள குக் வித் கோமாளி சீசன் 3 குறித்தும் அறிவித்துள்ளது.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி

வரும் ஜனவரி 22ம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளதாகவும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதுகுறித்த அடுத்தடுத்த பிரமோக்களும் வெளியிடப்பட்டு வருகின்றன.

நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா ரோஷினி

நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா ரோஷினி

தற்போதைய பிரமோவில் பாரதி கண்ணம்மா புகழ் ரோஷினி நடனமாடுவதாகவும் அவர் சமைப்பதாகவும் தனக்கு பிடித்தமானவர்களுக்கு சமைக்க பிடிக்கும் என்று கூறும்படியும் உள்ளது. தம் தம் பாடலுக்கு அவர் சிறப்பாக நடனமாடுகிறார்.

Recommended Video

Cook with Comali பெரிய Turning Point | Naai Sekar Pavithra Lakshmi & Sathish
அள்ளும் பிரமோ

அள்ளும் பிரமோ

மேலும் கோமாளியுடனான சேட்டைகளும் இந்த பிரமோவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் மட்டுமின்றி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரிலும் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ வந்துடுச்சு என்றும் விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் விளம்பரப் படுத்தியுள்ளது,

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X