CWC ஷோவில் சமைத்த உணவை சாப்பிட்ட சிறுவனுக்கு மயக்கம்.. பதறிய நடுவர்கள்..கடைசியில் என்னாச்சு தெரியுமா!
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமைத்த உணவை சாப்பிட்ட சிறுவன் மயக்கமடைந்ததால், நடுவர்கள் பதறிப்போனார்கள்.
ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நிகழ்ச்சியில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியும் ஒன்று.
சமையல் நிகழ்ச்சியான இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றியால் இதுவரை 3 சீசன்கள் முடிந்து, நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது.

குக் வித் கோமாளி : நான்காவது சீசனில், விசித்ரா, மைம் கோபி, ஷெரின், சிருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியன், காளையன், கிஷோர் ஆகியோர் குக்குகளாகவும், இதுவரை கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொள்வதற்காக பல சமையல் நிபுணர்களுடன் சமையல் கற்றுவந்த தற்போது குக்காக மாறிஇருக்கிறார்.
புதிய ப்ரோமோ : இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நாளை ஒளிபரப்பாக உள்ள எபிசோடுக்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்,குழந்தைகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். பவி என்ற குட்டிப் பையனுக்கு நடுவர் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் சமைத்த உணவை ஊட்டி விடுகிறார் அதற்கு அந்த சிறுவன் தனக்கு இந்த உணவு பிடிக்காது என்று சாப்பிட மறுக்கிறான்.

மயங்கிய சிறுவன் : ஆனாலும் வெங்கடேஷ் பட் வலு கட்டாயமாக ஊட்டிவிடசாப்பிட்டதும் அந்த சிறுவன் வாந்தி எடுப்பதுபோல் நடிக்கின்றார். பின்னர் மயங்கி விழுகின்றார். அதைப் பார்த்ததும் சுற்றி நின்றவர்கள் டேய் என்னடாச்சுடா என கேட்டு அதிர்ச்சி அடைந்து பதறிப்போக சிரித்துக்கொண்டே எழுந்திருக்கிறான். அதன் பிறகுதான் அந்த சிறுவன் மயக்கம் வருவது போல் நடித்துள்ளான் என்பது அவர்களுக்கு தெரிவருகிறது.
நகைச்சுவைக்கு பஞ்சமில்லை : வழக்கமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றே அதில், நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. அதிலும், இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் இருப்பதால், இந்த வாரம் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்று ரசிகர்கள் நிகழ்ச்சியைக் காண ஆர்வமுடன் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











