cook with comali Season 4 : இந்த வாரம் வெளியேறிய போட்டியாளர்.. சோகத்தில் ரசிகர்கள் !
சென்னை : குக்வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறி உள்ள பேட்டியாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அடுத்த படி மிகவும் பிரபலமாக இருப்பது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்
இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை வறுயி குலுங்க சிரிக்கவைத்தது மட்டுமில்லாமல் பார்வையாளர்கள் கவலையை மறக்க வைக்கும் மறுந்தாக உள்ளது.
குக் வித்கோமாளி 4: ஜாலியாக விளையாடிக்கொண்டே வித்தியாச வித்தியாசமாக சமைக்கும் நிகழ்ச்சியாக இருப்பதார் இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. ரசிகர்கள் மட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முதல் இடத்தில் உள்ளது. இதில், வெங்கடேஷ் பட், செஃப் தாமோதரன் தலைமையில் கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
பிடித்த நிகழ்ச்சி : இந்த 4வது சீசனும் எப்போதும்போல் 10 குக்குகளுடன் தொடங்கியது. கடந்த வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றிபெற்று முதல் ஆளாக டாப் 5-க்குள் நுழைந்தார் சிவாங்கி. இந்த சீசனில் இருந்து திடீரென விலகிய மணிமேகலை ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். இவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் மணிமேகலை மீண்டும் நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த வாரம் வெளியேறியது யார் : இந்த நிகழ்ச்சியில் இதுவரை கிஜோர் ராஜ்குமார், ராஜ ஐயப்பா, விஜே விஷால், காளையன், ஷெரின், கஜேஷ் ஆகியோர் வெளியேறி உள்ள நிலையில் இந்த வாரம் ஆன்ட்ரியன் வெளியேறி உள்ளார். ஆரம்பம் முதல் விதவிதமான சமையல் செய்து அசத்திய ஆன்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

சோகத்தில் ரசிகர்கள் : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஆன்ரியா அழகாக கொஞ்சி பேசும் தமிழை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சமூக வலைத்தளத்தில் அனைவரின் மனம் கவர்ந்த ஜிபி முத்துத்து ஆன்ட்ரியனை ஆன்ட்டி ஆன்ட்டி என அழைத்து பார்வையாளர்களை மேலும் சிரிப்பில் ஆழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











