குக் வித் கோமாளி சீசன் 5-யில் வனிதா? அவரே வெளியிட்ட போஸ்ட்.. அப்போ நடுவருக்கே பிரச்சனை தானா?
சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருக்கிறார். அப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி குறித்து புது அப்டேட் கொடுத்திருக்கிறார்.
அதாவது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு வனிதா கொடுத்த பதில் இப்போது பலரையும் இன்ப அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் நடிகை வனிதா விஜயகுமார் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனால் அவருடைய திருமண வாழ்க்கை அவர் நினைத்த மாதிரி இல்லை. முதல் திருமண வாழ்க்கை சரி இல்லாமல் போகவே அதை விட்டு விலகி விவாகரத்து வாங்கி அடுத்த திருமண வாழ்க்கையில் இணைந்தார்.
ஆனாலும் அடுத்தடுத்து திருமண வாழ்க்கையில் வனிதாவிற்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. அதற்கு பிறகு அவருடைய அப்பா விஜயகுமாரோடு ஏற்பட்ட குடும்ப பிரச்சனை மூலமாக மீண்டும் வெளி உலகத்திற்கு வனிதா தெரிய வந்தார். அந்த நேரத்தில் வனிதா பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா அந்த நிகழ்ச்சியில் கண்டெண்டுக்கு பஞ்சமே இல்லாமல் தினமும் கண்டண்ட் கொடுத்து ப்ரோமோகளில் இடம் பிடித்து விட்டார். அதற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா தன்னுடைய சமையல் திறமையை காட்டி பலரையும் வியக்க வைத்திருந்தார்.
அதற்கு பிறகு சமையலுக்காக ஒரு youtube சேனலையே வனிதா தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை ரிவ்யூ செய்து வருகிறார். இந்த நிலையில் தான் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வனிதாவின் மகளான ஜோவிகா ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். ஆனால் வனிதா எதிர்பார்த்தபடி ஜோவிகா வெற்றி பெறாமல் பாதியிலேயே திரும்பி வந்துவிட்டார்.
இப்படியான நிலையில் இப்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஜோவிகா கலந்து கொள்வாரா என்று இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் வனிதாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு வனிதா, "ஜோவிகா இப்போ ரொம்பவே பிஸியா இருக்கா.. அடுத்தடுத்து அவளுக்கு அதிகமான வேலைகள் இருக்கிறது. ஆனால் என்னை எதிர்பார்க்கலாம்." என்று கூறி இருக்கிறார்.

அதே நேரத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டவர் அடுத்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்ற விதி இருக்கும் நிலையில் வனிதா என்னை எதிர்பார்க்கலாம் என்று குறிப்பிட்டு இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வனிதா தான் இறங்கப் போகிறாரா? என்று கேள்வி ரசிகர்களின் மத்தியில் இருக்கிறது.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தர்ஷன் தொகுத்து வழங்கி வருகிறார். ஆனால் கடந்த சீசனில் விஜே மணிமேகலை திடீர் தொகுப்பாளராக அவரோடு களம் இறங்கி இருந்தார். இப்படியான நிலையில் இந்த சீசனில் தர்ஷனோடு வனிதாவும் தொகுப்பாளராக களம் இறங்குவாரா? அப்படி இறங்கினால் நடுவர்கள் மற்றும் கோமாளிகளின் நிலைமை அவ்வளவுதானா? என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











