பஞ்சாயத்தை பத்தவச்சிட்டு.. பாட்ஷா லுக்கில் போஸ் வேற.. மணிமேகலை ராக்ட்.. பிரியங்கா ஷாக்ட் ரைமிங் வேற!
சென்னை: தமிழ் சின்னத்திரை உலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் பிரச்னை என்றால் அது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடைபெற்ற பிரச்னைதான். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்த மணிமேகலைக்கும் குக்காக இருந்த பிரியங்காவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பெரும் பிரச்னையாக உருவெடுத்து, நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறும் அளவிற்கு பஞ்சாயத்து முற்றியது.
அதன் பின்னர், மணிமேகலை தரப்பில் அறிக்கை அதைத் தொடர்ந்து வீடியோ என பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாஸான லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் தனது பணிகளில், பிரியங்கா இடையூறு செய்வதாக கூறி, மணிமேகலை வெளியேறிய விவகாரம் தொடர்பாக மணிமேகலை தரப்பில், ஒரு அறிக்கையும் ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் பிரியங்கா தரப்பில் எந்தவிதமான பதிலோ விளக்கமோ கொடுக்கப்படவில்லை.

மணிமேகலைக்கு ஆதரவு: இதுவரை இந்த விவகாரத்தில் தங்களது மூக்கை நுழைத்து பேசியவர்களில் பெரும்பாலானோர், மணிமேகலைக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்தனர். பலரோ மணிமேகலைக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பிரியங்காவுக்கு எதிராக எதையுமே பேசவில்லை. குறிப்பாக மா.கா.ப. ஆனந்த் இது தொடர்பாக பேசுகையில், தமிழ் நாட்டில் இதுதான் ரொம்ப முக்கியமான பிரச்னையா என பதில் கேள்வி எழுப்பி நழுவிக்கொண்டார். விஜய் டிவியில் முக்கியமான நபராக, இன்னும் சொல்லப்போனால் விஜய் டிவியின் முகமாக இருக்கக் கூடிய நீயா நானா கோபிநாத் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து கப்சிப் நிலையிலேயே உள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரியங்காவுக்கு எதிர்ப்பு: இதற்கு முன்னர் விஜய் டிவியில் பணி புரிந்தவர்கள் தொடங்கி பிரியங்காவுடன் பல நிறுவனங்களில் பணி புரிந்தவர்கள், பிரியங்காவின் சொந்த வாழ்க்கை குறித்து தெரிந்தவர்கள் வரை, பிரியங்காவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை குற்றச்சாட்டாக முன் வைக்கின்றனர். இப்படியானவர்கள் வைக்கும் குற்றச்சாட்டு, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு நேரடி காரணமாக இல்லை என்றாலும், பிரியங்காவின் செயல்பாடுகள் ஆதிக்கம் நிறைந்ததாக இருக்க, அதுவே காரணம் எனக் கூறுகின்றனர்.

மாஸ் ஃபோட்டோ: இவையெல்லாம் ஒருபக்கம் புகைச்சலை ஏற்படுத்திக் கொண்டு இருக்க, இந்த பிரச்னையை வெளியுலகிற்கு தெரிவித்த மணிமேகலை தனது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மாஸான லுக்கில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கிட்டத்தட்ட பாட்ஷா பாய் ரேஞ்சுக்கு இருக்கும் இந்த புகைப்படத்திற்கு அவரை இணையத்தில் பின் தொடர்பவர்கள் லைக் செய்து வருகின்றனர். இதுமட்டும் இல்லாமல், அந்த புகைப்படத்தின் கமெண்ட் செக்ஷனில் பலரும் மணிமேகலைக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒரு கமெண்ட்டில் மணி ராக்ட் பிரியங்கா ஷாக்ட் என இடம் பெற்றுள்ளது. இந்த கமெண்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











