மாதம்பட்டி ரங்கராஜ் மனைவி எவ்வளவு அழகுனு பாருங்க.. இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ!

சென்னை: சமையல் துறையில் சிறந்து விளங்கி வரும் மாதம்பட்டி ரங்கராஜ், தனது வித்தியாசமான தனித்துவமான சமையல் மூலம் குறுகிய காலத்திலேயே பிரபலமானவர். தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்க உள்ள மாதம்பட்டி ரங்கராஜின் குடும்ப புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கோவை மாதம்பட்டியை சேர்ந்தவர் ரங்கராஜ் மாதம்பட்டி பாகசாலா என்ற பெயரில் கேட்டரிங் தொழிலை நடத்தி வருகிறார். மிகப்பெரிய சமையல் குடும்பத்தை சேர்ந்தவரான இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக சமையல் கலையில் பயணித்து வருகிறார். திருமணம், காது குத்து போன்ற சின்ன சின்ன சமையல் நிகழ்ச்சிகளுக்கு சமைத்து கொடுத்து வந்தார். இவருடைய சமையலில் ஆறு சுவையும் நிறைந்து இருக்கும் என்பதால் குறுகிய காலத்திலேயே பிரபலமாகிவிட்டார். தமிழ்நாட்டில் விஐபிக்களின் வீட்டு விசேஷத்திற்கு இவருடைய சமையல் தான் பிரதானமாக இருக்கிறது.

cook with comali season 5 judges madhampatty rangaraj Family photos trending on social media

குக்வித் கோமாளி சீசன் 5: தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 5ல் நடுவராக இணைந்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். ரசிகர்களிடம் மிகவும் பிரபலமான இந்த நிகழ்ச்சியில் சமையலை விட, ஆட்டம், பாட்டம், கலகலப்பு நிறைந்து இருக்கும் என்பதால், இந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். குக்வித் கோமாளி இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில்,ஐந்தாவது சீசனில் செப் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ளாமல் விலகியதால் மாதம்பட்டி ரங்கராஜ் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சி கடந்த வாரம் கோலாகலமாக துவங்கியது.

மாதம்பட்டி ரங்கராஜன்: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்,மாதம்பட்டி ரங்கராஜன் நடுவராக வருகிறார் என்று சொன்னதிலிருந்து பலர் அவருக்கு ஆதரவு தந்தாலும், சிலர் செஃப் வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாக கருத்துக்களை பகிர்ந்து வருகிறார். செஃப் வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள டாப்பு குக்கு டூப் குக்கு என்ற நிகழ்ச்சியில் நடுவராகி உள்ளார். மேலும், இந்த நிகழ்ச்சியில் வடிவேலு இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

cook with comali season 5 judges madhampatty rangaraj Family photos trending on social media

க்யூட் மனைவி: இந்நிலையில், மாதம்பட்டி ரங்கராஜனின் குடும்ப புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. ரங்கராஜனின் மனைவி நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் சும்மா அம்சமாக இருக்கிறார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ் இதை டிரெண்டாக்கி வருகின்றனர். மாதம்பட்டி ரங்கராஜனின் சமையல் கலை வல்லுநராக மட்டுமில்லாமல், மெஹந்தி சர்க்கஸ், பென்குயின் என்ற படத்தில் நடித்தும் இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X