பிரம்மாண்டமாக நடக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 ஷோ இறுதிப்போட்டி.. வெளியானது புதிய ப்ரமோ!

சென்னை : விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான குக் வித் கோமாளி ஷோ தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் அம்மு அபிராமி, தர்ஷன், ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

மேலும் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகியுள்ளனர் கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளனர்.

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி

குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி

விஜய் டிவியின் பிரம்மாண்டமான ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள ஷோ குக் வித் கோமாளி நிகழ்ச்சி. கடந்த சில மாதங்களாக பல்வேறு டாஸ்க்குகளுடன் சிறப்பான எபிசோட்களை இந்த ஷோ ரசிகர்களுக்கு கொடுத்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்த ஷோ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

பிரம்மாண்டமான இறுதிப்போட்டி

விரைவில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இதற்கான போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரம் இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி மிகவும் பிரம்மாண்டமாக ரசிகர்களை சந்திக்க வருகிறது.

இறுதிப்போட்டிக்கான ப்ரமோ

இறுதிப்போட்டிக்கான ப்ரமோ

மதியம் 3 மணி முதலே இந்த ஷோ பிரம்மாண்டமான இறுதிப்போட்டியை ஒளிபரப்ப உள்ளது. இதன் ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான சூட்டிங் ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டதாக கோமாளி ஷிவாங்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை 2 மணியுடன் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியின் சூட்டிங் நடைபெற்று முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

யார் அந்த வெற்றியாளர்?

யார் அந்த வெற்றியாளர்?

ஆயினும் டைட்டில் வின்னர் குறித்த தகவல்களை அனைவரும் மிகவும் சீக்ரெட்டாக வைத்துள்ளனர். கடந்த இரு சீசன்களின் டைட்டில் வின்னர்களாக வனிதா விஜய்குமார் மற்றும் கனி இருந்த நிலையில், தற்போது இந்த சீசனின் வின்னர் குறித்து அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வைல்ட் கார்ட் என்ட்ரி

வைல்ட் கார்ட் என்ட்ரி

இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கு தர்ஷன், அம்மு அபிராமி, ஸ்ருதிகா மற்றும் வித்யூலேகா ஆகியோர் முன்னேறிய நிலையில், வைல்ட் கார்ட் மூலம் கிரேஸ் கருணாஸ் மற்றும் சந்தோஷ் பிரதாப் ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். இந்த போட்டியாளர்களில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்.

ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோ

மக்களின் சிறப்பான ஸ்ட்ரெஸ் பஸ்டர் ஷோவாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த ஷோ ஆண்டு முழுவதும் ஒளிபரப்பாக வேண்டும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஷோ இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது அவர்களை வருத்தம் கொள்ள வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X