ஸ்ருதிகாவை தெறிக்கவிட்ட கோமாளிகள்... அடுத்த லெவலில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி!

சென்னை : விஜய் டிவியில் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி இரண்டாவது வாரமாக தொடர்ந்துள்ளது.

முதல் வாரத்தில் போட்டியாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது வாரத்தை பிரமோட் செய்யும் வகையில் அடுத்தடுத்த பிரமோக்களை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி விளங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது மூன்றாவது சீசன் புதிய போட்டியாளர்களுடன் துவங்கியுள்ளது.

ஏராளமான எதிர்பார்ப்பு

ஏராளமான எதிர்பார்ப்பு

இந்த நிகழ்ச்சியில் புதிய புதிய குக்குகள் மற்றும் கோமாளிகள் களமிறங்கியுள்ளனர். இதனால் நிகழ்ச்சிக்கு ஏராளமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த வாரத்தில் துவங்கிய நிகழ்ச்சியில் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

கணிசமான நகைச்சுவை

கணிசமான நகைச்சுவை

இதில் நகைச்சுவையை கணிசமாக புகுத்தியிருந்தது விஜய் டிவி. ரசிகர்கள் முதல் வாரத்திலேயே இந்த நிகழ்ச்சியில் கட்டிப் போடப்பட்டார்கள். தொடர்ந்து நிகழ்ச்சியை பார்க்க அவர்கள் தயாராகிவிட்டனர். இந்நிலையில் மேலும் நிகழ்ச்சியை பிரமோட் செய்யும் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது விஜய் டிவி.

அடுத்தடுத்த பிரமோக்கள்

அடுத்தடுத்த பிரமோக்கள்

அடுத்தடுத்த பிரமோக்களை வெளியிட்டு வருகிறது. ஒருநாளில் அதிகமான பிரமோக்களை வெளியிட்டு வருகிறது. இந்த பிரமோக்களின் கோமாளிகளின் சேட்டைகளும் குக்குகளின் பங்களிப்பும் கணிசமாக காணப்பட்டது. இதனுடன் செஃப்களும் தங்களது பங்கிற்கு அவர்களுடன் இணைந்து நிகழ்ச்சியை களைகட்டும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

காமெடியில் இறங்கிய செஃப்

காமெடியில் இறங்கிய செஃப்

நிகழ்ச்சியில் கோபி உள்ளிட்டவர்களை கொம்பால் அடிக்கும் செஃப் வெங்கடேஷ் பட்டின் செயல்களும் ரசிகர்களால் விமர்சனங்களுக்கு உள்ளானது. கவுண்டமணி போல, கோமாளிகளை இவர் தாக்குவது நகைச்சுவைக்காக இப்படி இறங்குவது எந்தவகையில் நல்லது என்று கேள்வி எழுந்தது.

வெங்கடேஷ் பட் விளக்கம்

வெங்கடேஷ் பட் விளக்கம்

அதற்கு அவரும் நகைச்சுவைக்காக செய்யும் செயல்களை நகைச்சுவையாக மட்டுமே பார்க்குமாறு ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரமோட் செய்துவரும் விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ள பிரமோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Recommended Video

CWC புது Comali Sheethal Clarin Unknown Biography | Cook With Comali Sheethal
ஸ்ருதிகாவை புகழ்ந்த கோமாளிகள்

ஸ்ருதிகாவை புகழ்ந்த கோமாளிகள்

நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றுள்ள ஸ்ருதிகாவின் அழகை கோமாளிகள் தொடர்ந்து புகழ்ந்த நிலையில், அவர் வெட்கப்பட்டு சிரிக்க, தொடர்ந்து பெண் கோமாளிகளும் அவருக்கு ஈடுகொடுத்து சிரிக்க, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அரங்கமே சிரிப்புமயமானது. இதன் பிரமோ சிறப்பாக அமைந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X