ஃபைனலுக்கும் காரக்குழம்பா? குக்வித் கோமாளி கனியை கிண்டலடித்த ஏஆர். ரஹ்மான் !
சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 கிராண்டு பினாலே நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது இதில், வீடியோ காலில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் போட்டியாளர் கனியை கிண்டலடித்துள்ளார் .
இந்த கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில், சிம்பு, சந்தோஷ் நாராணன் மற்றும் அவரது மகள் தீ ஆகியோர் பங்கேற்கின்றனர்.

வயிறு குலுங்க சிரிப்பு
விஜய் டிவியில் ஹிட் ஆக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக்வித் கோமாளி.இது மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதில் போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது.

கனி, அஸ்வின், ஷகிலா
இதில் புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்கள். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தமிழ் புத்தாண்டு அன்று
குக் வித் கோமாளி கிராண்ட் ஃபைனலுக்கான எபிசோட்கள் ஏப்ரல் 14-ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் அதன் ப்ரமோ வீடியோக்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதில் வீடியோ கால் வழியாக போட்டியாளரான கனியிடம் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ஃபைனலுக்கும் காரக்குழம்பு தானா என்று நகைச்சுவையாக கேட்கிறார். இதில். நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ உள்ளிட்ட பலர் குக் வித் கோமாளி ஃபைனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினராக
இதில் ஃபைனல் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரது மகள் தீ மற்றும் வாணொலி காட்சி மூலம் ஏ.ஆர்.ரஹ்மான்உள்ளிட்ட பலர் குக் வித் கோமாளி ஃபைனலில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வழக்கம் மேலும் இதில் புகழ், ஷிவாங்கி,தங்கதுரையின் நகைச்சுவை அட்டகாசங்கள் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











