ஒரு ஆண்டை பூர்த்தி செய்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி... ஷிவாங்கி மகிழ்ச்சிப்பதிவு!

சென்னை : விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்தது.

Recommended Video

Dance Master Sridhar Speech | Yaathi Yaathi Song | Tamil Filmibeat

இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனை ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி நிறைவடைந்து தற்போது ஒரு ஆண்டை கடந்துள்ளது குறித்து ஷிவாங்கி உள்ளிட்டோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவி நிகழ்ச்சிகள்

விஜய் டிவியில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. பிக் பாஸ், ஜோடி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை, குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.

குக் வித் கோமாளி சீசன் 2

குக் வித் கோமாளி சீசன் 2

அந்தவகையில் கடந்த ஆண்டு நடைபெற்ற குக் வித் கோமாளி சீசன் 2 மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இந்த நிகழ்ச்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

குக்குகள் -கோமாளிகள்

குக்குகள் -கோமாளிகள்

இந்த நிகழ்ச்சியில் குக்குகளாக நடிகை ஷகிலா, பாபா பாஸ்கர், மதுரை முத்து, அஸ்வின், தர்ஷா குப்தா, பவித்ரா லட்சுமி, கடைக்குட்டி சிங்கம் புகழ் தீபா, கனி ஆகியோர் இருந்தனர். மேலும் கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா வீஜே பார்வதி, சக்தி ஆகியோர் காணப்பட்டனர்.

பிரபலமான போட்டியாளர்கள்

பிரபலமான போட்டியாளர்கள்

இந்த கோமாளிகளின் நகைச்சுவை இந்த நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியின்மூலம் ஷிவாங்கி, அஸ்வின், புகழ் உள்ளிட்டவர்கள் பெரியத் திரையிலும் நடிக்கும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகின்றனர். ஷிவாங்கி தன்னுடைய பாடல் திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்புகளை தொடர்ந்து பெற்று வருகிறார்.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் விஜய் டிவி நடத்தியது. இதில் மீண்டும் அனைவரும் கலந்து கொண்டு தங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளை நடத்தினர். மிகவும் சிறப்பாக இந்த வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

ஓராண்டு நிறைவு

ஓராண்டு நிறைவு

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி நிறைவடைந்து தற்போது ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது டீம். இதுகுறித்து ஷிவாங்கி உள்ளிட்டவர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஷிவாங்கி, தான் ராஜ உடையில் வந்து கலக்கிய புகைப்படத்தை பதிவிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X