நடுவராக களமிறங்கிய ரோஜா.. தொகுப்பாளர் ரக்ஷன் இல்லை.. அதிரடி மாற்றங்களுடன் குக் வித் கோமாளி சீசன்7!

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்களை கடந்துள்ளது. பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதை நோக்கமாக வைத்து இருக்கும் இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் வரும் ஏப்ரல் 4ந் தேதி மற்றும் 5ந் தேதி இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமையல் நிகழ்ச்சியான இதில் சமையலை விட, கோமாளித்தனம் தான் அதிகமாக இருக்கும். நடுவர் விதவிதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுப்பார்கள். அதை செய்ய விடாமல் தடுப்பதற்கு என்றே சில கோமாளிகளும் இருப்பார்கள். கடந்த சீசனில் நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், கௌஷிக் ஆகியோர் இருந்த நிலையில் நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்ட நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

Cooku with Comali grand launch Roja 7
Photo Credit:

ரோஜா களமிறங்கினார்: இந்த நிலையில் குக் வித் கோமாள் சீசன் 7 நிகழ்ச்சிக்கான ப்ரமோ வெளியானது. அதில், நிகழ்ச்சியின் நடுவர்களாக செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ், மற்றும் செஃப் கௌஷிக் ஆகியோருடன் நான்காவது நடுவராக நடிகை ரோஜா இணைந்துள்ளார். அதோடு குக் வித் கோமாளியின் ஆஸ்தான தொகுப்பாளராக இருந்த ரக்சனின் கால் ஷீட் இல்லாததால், இந்த முறை அவருக்கு பதிலாக ஷாலின் சோயா எண்ட்ரி கொடுக்கிறார். இவர் ஏற்கெனவே குக் வித் கோமாளி ஷோவில் குக்காக கலந்து கொண்டவர்.

கிராண்ட் லான்ச்: அதோடு மட்டுமில்லாமல் இந்த முறை நிஜ கணவன் - மனைவியை ஜோடியாக களமிறங்கப்பட்டுள்ளனர். அதன்படி பாடகர் மனோ அவரது மனைவி ஜமீலா,
அறந்தாங்கி நிஷா அவரது கணவர் ரியாஸ் அலி, பிக்பாஸ் கானா வினோத், பிக் பாஸ் சம்யுக்தா மற்றும் அனிருத்தா, பிரஜின் மற்றும் சண்ட்ரா, அய்யனார் துணை சீரியல் அரவிந்த ஆகிய நிஜ ஜோடிகள் போட்டியில் களமிறங்குகின்றனர். அதே போல கோமாளிகளாக புகழ், தங்கதுரை, சுனிதா, ராமர் ஆகியோர் களமிறங்க உள்ளார்கள். இந்த சீசனின் கிராண்ட் லான்ச் வரும் ஏப்ரல் 4ந் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 4 முதல் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X