பெப்பர்ஸ் டிவியில் பேஷன் கொண்டாட்டம்: கவர் பேஜ்
பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை 11.30 மணிமுதல் 12 மணிவரை கவர்பேஜ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த நிகழ்ச்சியில் மேடை நிகழ்ச்சிகள், இசை, நடனம், நாடகம், பேஷன் ஷோ போன்றவை ஒளிபரப்பாகிறது.
இந்தவாரம் கவர்பேஜ் நிகழ்ச்சயில் அழகான மாடல்கள் பங்கேற்ற பேஷன் ஷோ ஒளிபரப்பானது. இதில் ஒயிலான மாடல்கள் வண்ண வண்ண உடையணிந்து வந்து கேட்வாக் செய்து வந்தனர்.

மாடல்களின் அணிவகுப்பு
மாடல்கள் அணிந்து வந்த அழகான உடைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.

கொண்டாட்ட நிகழ்ச்சி
பார்ப்போரை பரவசப்படுத்தும் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு பெப்பர்ஸ் டிவி ரிப்போர்ட்டர்கள் நேரடியாக சென்று நிகழ்ச்சிகளை பதிவு செய்து வந்து ரசிகர்களுக்கு ஒளிபரப்புகின்றனர்.

இசை நிகழ்ச்சி
இதேபோன்று இசை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிகள், அறுசுவை உணவுகளில் கிடைக்கும் உணவுகள், நாகரீக விருந்துகள்,புத்தக வாசிப்பு பற்றி எடுத்துக் காட்டுகிறது.

சென்னை நிகழ்ச்சிகள்
சென்னை மாநகரில் நடைபெறும் புத்தம் புதிய கொண்டாட்ட நிகழ்ச்சிகளை உடனுக்குடன் எடுத்துக்காட்டுகிறது கவர்பேஜ்.


Click it and Unblock the Notifications











