எல்லோரும் வீட்டுக்கு போங்கப்பா, பிக் பாஸ் டைட்டிலை வெல்ல ஆள் வந்தாச்சு: சி.எஸ். அமுதன்

By Siva

Recommended Video

பிக் பாஸ் விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை?

சென்னை: எல்லோரும் வீட்டுக்கு போங்கப்பா, பிக் பாஸ் டைட்டிலை வெல்ல ஆள் வந்தாச்சு என்று இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 2வது சீசனின் முதல் ஒயில்டு கார்டு என்ட்ரியாக வீட்டிற்குள் சென்றுள்ளார் நடிகையும், தயாரிப்பாளருமான விஜயலட்சுமி. பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் நாயகி சீரியலில் இருந்து வெளியேறியுள்ளார்.

பார்வையாளர்களின் எண்ணம் குறித்து நன்கு அறிந்துள்ள அவர் பிக் பாஸ் வீட்டில் சேஃபாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமுதன்

என் தோழி விஜயலட்சுமி பிக் பாஸ் வீட்டிற்கு செல்கிறாராமே? அனைவரும் வீட்டுக்கு கிளம்பலாம், அவர் வெற்றி பெறுவார் என்று தமிழ் படம் 2 இயக்குனர் சி.எஸ். அமுதன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ப்ரொமோ

பிக் பாஸ் நிகழ்ச்சி எல்லாம் பார்க்கிறீர்களா என்று ஒருவர் கேட்டதற்கு, இல்லை ப்ரொமோ மட்டும் பார்ப்பேன் என்று பதில் அளித்துள்ளார் அமுதன். தப்பிச்சிட்டீங்க அமுதன்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ள விஜயலட்சுமி மகத், ஐஸ்வர்யா, யாஷிகா அருகில் கூட செல்வது இல்லை. அவர்கள் 3 பேரையும் பார்த்தாலே பார்வையாளர்களுக்கு சுத்தமாக பிடிக்காது என்பது விஜயலட்சுமிக்கு தெரியாதா என்ன?. பிக் பாஸ் வீட்டுக்கு வந்த வேகத்தில் டேனியையும் ஒரேயொரு கேள்வி கேட்டு மடக்கிவிட்டார் விஜயலட்சுமி. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கே...

டைட்டில்

டைட்டில்

பிக் பாஸ் டைட்டிலை விஜயலட்சுமி ஜெயிப்பார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?. கடந்த சீசனில் பிந்து மாதவியும் இப்படித் தான் பயங்கரமாக என்ட்ரி கொடுத்தார். ஆனால் அதன் பிறகு அவர் பெரிதாக ஜொலிக்கவில்லை. விஜயலட்சுமி எப்படி என்று பொறுத்திருந்து பார்ப்போம். படங்கள், சீரியல் ஆகியவற்றில் இருந்து கற்றுக் கொண்ட மொத்த வித்தையையும் இறக்குவாரா விஜயலட்சுமி?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X