CWC 5 பிரம்மாண்ட இறுதிச்சுற்று.. கார்த்தி -அரவிந்த்சாமி கையில் எடுத்த விஷயம்.. யோவ் கீழ போடுங்கய்யா!
சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 29ம் தேதி இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெற உள்ளது. இதுகுறித்து அடுத்தடுத்த ப்ரோமோக்களால் ரசிகர்களை தாக்கி வருகிறது சேனல். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் மெய்யழகன் படத்தின் அரவிந்த்சாமி மற்றும் கார்த்தி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அடுத்தடுத்த பிரமோக்கள் மூலம் இதை குக் வித் கேமாளி டீம் தெரிவித்துள்ளது. மேலும் நடிகை ராதா உள்ளிட்டவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் என்ன மாதிரியான சம்பவங்கள் நடக்கவுள்ளது என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரும் 29ம் தேதி இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிச் சுற்று நடக்கவுள்ளது. தொடர்ந்து 5 மணி நேரம் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரோமோக்களை சேனல் தரப்பு தற்போது தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, விடிவி கணேஷ், சுஜிதா உள்ளிட்ட 6 போட்டியாளர்கள் இறுதிச்சுற்றுக்கு தகுதியாகியுள்ள நிலையில் அவர்கள் மிகவும் அழகான லுக்கில் ரசிகர்களை கவர தயாராகியுள்ளதை இந்த பிரமோவில் பார்க்க முடிகிறது.
மெய்யழகன் பட டீம்: இதனிடையே மெய்யழகன் படக்குழுவினரும் இந்த பிரம்மாண்ட இறுதிச்சுற்றில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும்வ5கையில் பங்கேற்றுள்ளனர். நடிகர் கார்த்தி, அரவிந்த்சாமி உள்ளிட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில் அவர்களை பூங்கொத்து கொடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியினர் வரவேற்றதே பார்க்க முடிந்தது. இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ராதா, நடிகர் அரவிந்த்சாமி எப்போதுமே சமையல் மிகவும் முக்கியம் என்று கூறுவார் என்று பாராட்டு தெரிவித்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் சாமி தான் மிகச்சிறப்பாக சமைப்பேன் என்றும் கார்த்தி சிறப்பாக சாப்பிடுவார் என்றும் அரவிந்த் சாமி கூறியதையும் அடுத்தடுத்த பிரமோக்களில் பார்க்க முடிந்தது.

பாம்பை கையிலேந்திய அரவிந்த்சாமி: இதனிடையே, இந்த நிகழ்ச்சியில் பாம்பை கையில் ஏந்தியபடி அரவிந்த்சாமி உள்ளிட்ட டீம் இருப்பதை இந்த ப்ரோமோக்களில் பார்க்க முடிந்தது. தன் கையில் இருக்கும் பாம்பை கார்த்தி கையில் கொடுக்க முயல்கிறார் அரவிந்த்சாமி. இந்த பிரமோவை பார்த்து இது என்னடா கூத்து என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். என்னதான் இறுதிச்சுற்று மிகவும் பிரமாண்டமாக வித்தியாசமாக முயல வேண்டும் என்றாலும் பாம்பை கையில் வைத்துக் கொண்டு என்ன செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு இந்த இறுதிச்சுற்று எபிசோடில் விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
மணிமேகலை இல்லாத இறுதிச்சுற்று: விஜய் டிவியின் இந்த 5வது சீசனில் ரக்ஷனுடன் இணைந்து ஆங்கராக மாஸ் காட்டியிருந்தார் ஆங்கர் மணிமேகலை. ஆனால் குக்காக செயல்பட்ட பிரியங்காவுடன் அவருக்கு ஏற்பட்ட மோதல் காரணமாக நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு பதிலாக விடிவி கணேஷை ஆங்கராக இந்த நிகழ்ச்சியில் போட்டி ஏற்பாட்டாளர்கள் களமிறக்கி உள்ளனர். இவர் இந்த பிரம்மாண்டமான இறுதிப் போட்டியில் இறுதிச்சுற்று போடடியாளராக பங்கேற்கவுள்ள நிலையில், அதில் ரக்ஷன் மட்டுமே ஆங்கராக செயல்பட உள்ளதும் இந்த பிரமோவில் தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications











