மன்னிப்பு கேட்க சொன்ன குக் வித் கோமாளி சுனிதா.. எதுக்காக தெரியுமா?

சென்னை : விஜய் டிவியின் பிரதான நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் 3வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் கோமாளியாக வந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார் சுனிதா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான மற்றும் முன்னணி நிகழ்ச்சியாக காணப்படுகிறது குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி மிகச்சிறந்த ஸ்ரெஸ் பஸ்டராக இருப்பதாக அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். ஆண்டு முழுவதும் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளி சீசன் 3

இரண்டு சீசன்களை வெற்றிகரமாக முடித்த இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீசனும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த வாரத்தில் இந்த நிகழ்ச்சியின் பிரம்மாண்டமான இறுதிப்போட்டி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியே இதன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள்தான்.

கோமாளிகளின் சேட்டைகள்

கோமாளிகளின் சேட்டைகள்

குறிப்பாக கோமாளிகள் செய்யும் சேட்டைகள் மற்றும் அவர்களது வித்தியாசமான கெட்டப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் இந்த சீசனில் புதிதாக இணைந்தவர் கோமாளி சுனிதா. அசாமை சேர்ந்த சுனிதா விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி மூலம்தான் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

கோமாளி சுனிதா

கோமாளி சுனிதா

தொடர்ந்து சிங்கிள் பொண்ணுங்க, காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பாக பங்கேற்றுள்ளார். சில சீரியல்களிலும் நடித்துள்ள இவர் 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக நடித்திருந்தார். ராகவா லாரன்சின் காஞ்சனா 3 படத்திலும் இவர் நடித்துள்ளார்.

கொஞ்சும் தமிழ்

கொஞ்சும் தமிழ்

இவருக்கு சரியாக தமிழ் பேச வராது என்றாலும் இவர் கொஞ்சி கொஞ்சி பேசும் அழகை ரசிகர்கள் அதிகமாக ரசித்து வருகின்றனர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் சுனிதா. தனியாக யூடியூப் சேனலையும் நடத்திவரும் இவர் தன்னுடைய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் பகிர்வுகளை அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

மன்னிப்பு கேட்க சொன்ன சுனிதா

மன்னிப்பு கேட்க சொன்ன சுனிதா

இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஒரு புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒருவரை மன்னிக்க வேண்டும் என்றால் உடனடியாக மன்னித்து விடுங்கள். அது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ நமக்கு நல்லது என்று கூறியுள்ளார். எந்த பிரச்சினையையும் மனதில் வைத்திருந்தால் கெடுதல் நமக்குதான் என்றும் நாம் நிம்மதியாக இருந்தால் போதும் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கேள்வி

ரசிகர்கள் கேள்வி

இதையடுத்து அவர் எதற்காக இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார் என்று தெரிந்துக் கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அவருக்கு குக் வித் கோமாளி செட்டில் யாருடனாவது பிரச்சினை ஏற்பட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X