இறுதிக்கட்டத்தில் குக் வித் கோமாளி.. பைனல்ஸ் சூட்டிங்கும் முடிஞ்சிடுச்சாம்.. ஏக்கத்தில் ரசிகர்கள்!

சென்னை : விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி தற்போது 3வது சீசனை ஒளிபரப்பி வருகிறது.

இதனிடையே தற்போது இந்த நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இறுதிக்கட்டத்தில் ஸ்ருதிகா உள்ளிட்ட 4 போட்டியாளர்கள் தற்போது உள்ளனர். இதில் ஸ்ருதிகா நேரடியாக பைனலிஸ்டாக முன்னேறினார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

குக் வித் கோமாளி நிகழ்ச்சி

விஜய் டிவியின் முக்கியமான நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி காணப்படுகிறது. சமயத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியையே தூக்கி சாப்பிடும் வகையில் இந்த நிகழ்ச்சி காணப்படுகிறது. இந்த ஷோவை பார்ப்பதன்மூலம் தங்களது ஸ்ட்ரெஸ் மிகவும் குறைவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

வித்தியாசமான உணவுகள்

வித்தியாசமான உணவுகள்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் அவர்கள் சமைக்கும் வித்தியாசமான உணவுகள் ரசிகர்களை ஒருபுறம் கவர்ந்துவரும் நிலையில், கோமாளிகளின் சேட்டைகளும் கலக்கல் ரகம்தான். போதாததற்கு நடுவர்களும் இவர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி சமயத்தில் ட்ரெண்டிங்காகும்.

குக் வித் கோமாளி சீசன் 3

குக் வித் கோமாளி சீசன் 3

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி முடிந்த சில தினங்களிலேயே குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கியது. இரண்டு சீசன்களை வெற்றிகரமாக கடந்த இந்த நிகழ்ச்சி தற்போது 3வது சீசனை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் மிகுந்த வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.

இறுதிக்கட்டத்தில் குக் வித் கோமாளி சீசன் 3

இறுதிக்கட்டத்தில் குக் வித் கோமாளி சீசன் 3

தற்போது 3வது சீசனும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. புதிய போட்டியாளர்கள், புதிய கோமாளிகளுடன் இந்த நிகழ்ச்சி களைகட்டி வருகிறது. இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகை ஸ்ருதிகா நேரடியாக இறுதிப் போட்டியில் நுழைந்த நிலையில், தர்ஷன், அம்மு அபிராமி, வித்யூலேகா ஆகியோரும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

இறுதிப்போட்டி சூட்டிங் நிறைவு

இறுதிப்போட்டி சூட்டிங் நிறைவு

இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான சூட்டிங் நடந்து முடிந்துள்ளதாக குரேஷி தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ள அவர், அடுத்த சீசனில் சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

யாருக்கு டைட்டில்?

யாருக்கு டைட்டில்?

தற்போது இறுதிப்போட்டியின் சூட்டிங்கே நிறைவடைந்துள்ளதால் தர்ஷன் உள்ளிட்ட 4 பேரில் யார் டைட்டிலை வென்றிருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இன்றைய தினம் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி இருப்பதால் யார் உள்ளே நுழைவார்கள் என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது. மேலும் நிகழ்ச்சி நிறைவடைவது குறித்தும் அவர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.

ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள்

ரசிகர்களை கவர்ந்த போட்டியாளர்கள்

தர்ஷன் மற்றும் ஸ்ருதிகா இருவரிடையே போட்டி அதிகமாக காணப்படும் நிலையில், இருவருக்கும் தனித்தனியாக ஆதரவு தெரிவித்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். தர்ஷனின் அமைதியும் ஸ்ருதிகாவின் வெளிப்படையான பேச்சும் அவர்களது சமையலைக் காட்டிலும் அதிகமாக ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X