பவுர்ணமியை வானளாவிய அளவுக்கு அவள் அப்பாவுக்கு பிடிக்காது!

சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் பவுர்ணமி பாவமா இல்லை அதுக்கும் மேலயா என்பது போல பரிதாபம் வருது.

உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும்னு கேட்டால்... இவ்ளோ... இவ்ளோன்னு கைகளை விரித்து விரித்து அகல காண்பிப்போம்.

பவுர்ணமியை அவாளோட அப்பாவுக்கு எவ்ளோ பிடிக்காதுன்னு கேட்டால்... இவ்ளோ.. .இவ்ளோன்னு கைகளை அகல விரித்து அதுவும் போதாமல் வானம் வரைக்கும் பிடிக்காதுன்னுதான் சொல்லணும்.

பவானி பவுர்ணமி

பவானி பவுர்ணமி

பவுர்ணமியின் அப்பா சக்ரவர்த்தி பெரிய தொழிலதிபர். அவரின் முதல் தாரத்துக்கு பிறந்த பெண் பவுர்ணமி.இவ பிறந்த அடுத்த நிமிடம் மனைவி இறந்து விட ,அன்று வானளாவிய அளவுக்கு பவுர்ணமியைப் பிடிக்காமல் போனது சக்கரவர்த்திக்கு. அடுத்து இரண்டாம் தாரத்துக்கு பிறந்த பவானியை வானளாவிய அளவுக்கு பிடித்துப் போனது அவருக்கு.

ராம்கி பவானி

ராம்கி பவானி

ராம்கி பவுர்ணமியின் கூட படிச்சவன். அதனால் அவனுடன் அவ்வப்போது பேசிவந்த பவுர்ணமிக்கு, ஒரு நாள் அவன் மேல் காதல் வந்தது. ஆனால், ராம்கி பவுர்ணமியை காதலித்து கொண்டு இருக்கிறான். இன்னும் பவுர்ணமியிடம் சொல்லவில்லை. ஆனால், பவானி ராம்கியை பார்த்த உடனேயே காதலில் விழுந்துடறா.

சிஷ்யன் ராம்கி

சிஷ்யன் ராம்கி

ராம்கியின் சிஷ்யன் பவுர்ணமிக்கு லெட்டர் எழுதி குடுங்கண்ணே...நான் போயி குடுத்துடறேன்னு சொல்லிட்டு, பவுர்ணமியின் அப்பாவிடம் லவ் லெட்டரை குடுத்துடறான். ஏற்கனவே பவானி தான் ஒரு பையனை காதலிப்பதாக தந்தையிடம் சொல்லி இருந்ததால் மகளுக்கு என்றவுடன் ,அவரது ஒரே மகள் என நினைக்கும் பவானியிடம் லெட்டரை குடுத்துடறார்.

மகிழ்ச்சி பவானிக்கு

மகிழ்ச்சி பவானிக்கு

பவானிக்கு மகிழ்ச்சியாகி விடுகிறது... சக்கரவர்த்தியிடம் ராம்கியின் அப்பா அம்மா சம்மந்தமும் பேசிவிடுகிறார்கள்.இது பவுர்ணமிக்குத் தெரியாது. திடீரென ஒரு நாள் பவானிக்கு நிச்சயதார்த்தம்...அவளை ரெண்டு நாளைக்கு வீட்டை விட்டு அனுப்பிடுங்கன்னு அம்மா, மனைவியிடம் சொல்றார் சக்ரவர்த்தி.

ஹாஸ்டலுக்கு பவுர்ணமி

ஹாஸ்டலுக்கு பவுர்ணமி

பவுர்ணமியும் தோழியுடன் ஹாஸ்டலில் தங்க செல்வதாக கூறி செல்ல, பாதி வழியில் பார்த்த ராம்கி அவளை தன் வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றான். சக்ரவர்த்தியே இவள் தன் மகள் இல்லை என்று கூறும்போது, இவளை நம்ம வீட்டுக்கு அழைச்சுட்டு வந்துட்டானேன்னு பெத்தவங்க பேசிக்கறாங்க.

எதிரி சக்ரவர்த்தி

எதிரி சக்ரவர்த்தி

சக்ரவர்த்தியின் தொழில் எதிரி அப்பா என்றால், அவரது மகளோ பவுர்ணமியின் படிப்பு எதிரி. இருவரும் ஒன்று சேர்ந்து உங்கள்; மகள் பவுர்ணமி, பவானியின் கல்யாணத்தை தடுக்கவே ராம்கியின் வீட்டில் தங்கி இருக்கான்னு போட்டு குடுத்துடறாங்க. அப்புறமென்ன...சக்ரவர்த்தி நேரா பவுர்ணமியைத் திட்ட புறப்படறார்.

அப்பாவை கண்ட பவுர்ணமி திரு திருன்னு விழிக்கறா...அவளுக்கே இன்னும் ஒரு விஷயமும் தெரியாதே...ராம்கிதான் தன் தங்கை பவானிக்கு அப்பா பார்த்து இருக்கும் மாப்பிள்ளை என்று!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X