நைனா ஓ நைனா பாட்டுக்கே கதறிய மோகன் வைத்யா.. இதை பார்த்தா ஒப்பாரியே வைத்து விடுவார்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் மோகன் வைத்யா போன்று வேஷம் போட்டுக்கொண்டு சாண்டி செய்யும் அலப்பரைகள் அசத்தலாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று மோகன் வைத்யா வெளியேற்றப்பட்டார். கமல்ஹாசன் எவிக்ஷனை அறிவித்ததும் கதறிக் கதறி அழுதார் மோகன் வைத்யா.

முன்னதாக யார் காப்பாற்றப்படுவார்கள் என்று கமல் கேட்டப்போது கவின், சாண்டி ஆகியோர் சித்தப்பு என சரவணன் பெயரை கூறினர். இதனால் கோபித்துக்கொண்ட மோகன் வைத்யா, என் பெயரை சொல்ல தோனலயே உங்களுக்கு என்று கூறி கவின் மற்றும் சாண்டியிடம் சண்டை போட்டார்.

ஆசை தீர கட்டிப்பிடித்து

ஆசை தீர கட்டிப்பிடித்து

வழக்கமாகவே கண்ணை கசக்கி பெண்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் மோகன் வைத்யா, பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேறியபோது என்ன செய்திருப்பார் என்று சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு பெண் போட்டியாளர்களையும் ஆசை தீர கட்டியணைத்து நச்சு நச்சென இச்சு கொடுத்தார்.

சாண்டி அடிக்கும் கூத்து

சாண்டி அடிக்கும் கூத்து

இந்நிலையில் மோகன் வைத்யா தற்போது வீட்டில் இல்லாத நிலையில் சாண்டி மாஸ்டர் அவரை இமிடேட் செய்துள்ளார். இன்று வெளியான புரமோவில் அந்து கூத்து அரங்கேறுவது தெரியவந்துள்ளது.

அசத்திய சாண்டி

அசத்திய சாண்டி

அவரை போலவே தொப்பை, கண்ணாடி, பட்டை, தலையில் ஹேர் பேன்ட் என கலக்கலாக அசத்தியுள்ளார் சாண்டி. அதோடு மட்டுமல்ல அப்படியே மோகன் வைத்யாவை போன்றே நடந்து செல்கிறார் சாண்டி.

மிரண்டு ஓடிய பெண்கள்

மிரண்டு ஓடிய பெண்கள்

பின்னர் ஒவ்வொரு பெண்களையும் கட்டிப்பிடித்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதனால் மிரண்டு ஓடுகின்றனர் பெண் ஹவுஸ்மேட்ஸ்கள்.

ட்ரேடு மார்க் டயலாக்

ட்ரேடு மார்க் டயலாக்

இதைத்தொடர்ந்து கவின், சும்மாதானே நைனா கலாய்ச்சோம் என்கிறார். அதற்கு எல்லாருமே இப்படிதான் போதும் விட்டுடுங்க என மோகன் வைத்யாவின் ட்ரேடு மார்க் டயலாக்கை கூறுகிறார் சாண்டி. பார்க்கவே அசத்தலாக உள்ளது இந்த காட்சிகள்.

ஒப்பாரியே வைத்துவிடுவார்

ஒப்பாரியே வைத்துவிடுவார்

ஏற்கனவே நைனா ஓ நைனா என்ற பாடல் பாடியதற்கே அழுது ஊரைக் கூட்டினார் மனுஷன். இன்று மட்டும் சாண்டி செய்யும் இந்த அலப்பறைகளை பார்த்தார் பாவம் ஊரைக் கூட்டி ஒப்பாரியே வைத்து விடுவார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X