சிம்ரன் நடுவராக கலக்கும் டான்ஸ் தமிழா டான்ஸ்

By Mayura Akilan

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் டான்ஸ் தமிழா டான்ஸ் லிட்டில் மாஸ்டர்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிம்ரன் நடத்திய டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தது. சிம்ரன் தயாரித்து நடுவராக இருந்து நிகழ்ச்சியை நடத்தினார்.

தற்போது 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பங்கேற்கும் சீசன் 2 டான்ஸ் தமிழா டான்ஸ் தொடங்கியுள்ளது. இறுதிக்கட்ட தேர்வில் வெற்றி பெற்ற குழந்தைகள் இனிவரும் வாரங்களில் நடனமாட உள்ளனர்.

நடுவராக சிம்ரன்

நடுவராக சிம்ரன்

டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி, ஞாயிறுகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிம்ரனும், நடன இயக்குநர் சின்னி பிரகாஷ் அவர்களும் நடுவராக பங்கேற்கின்றனர்.

அசத்தும் குட்டீஸ்கள்

அசத்தும் குட்டீஸ்கள்

நிகழ்ச்சியில் குழந்தைகள் சம்பா, சல்சா, ஹிப்ஹாப், ஜாஸ், பரதநாட்டியம்,உள்ளிட்ட பலவித நடனங்களை ஆடி அசத்தப்போகின்றனர்.

மகேஸ்வரி - பிரஜீன்

மகேஸ்வரி - பிரஜீன்

டான்ஸ் தமிழா டான்ஸ் நிகழ்ச்சியை மகேஸ்வரியும், பிரஜீனும் தொகுத்து வழங்குகின்றனர்.

பிரபுதேவா பரிசு

பிரபுதேவா பரிசு

நிகழ்ச்சியில் வெற்றி பெற்று டான்ஸ் தமிழ் டான்ஸ் லிட்டில் மாஸ்டர் பட்டத்தை வெல்பவர்களுக்கு நடனப் புயல் பிரபுதேவா பரிசு வழங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X