டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 கிராண்ட் ஃபினாலே...டைட்டிலை வென்ற ஜோடி இவங்க தான்
சென்னை : கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2. ரசிகர்களை அதிகம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் இதுவும் ஒன்று. அதனால் இந்த நிகழ்ச்சி டிஆர்பி.,யில் டாப் இடத்தில் இருந்து வருகிறது.
டான்ஸ் ரியாலிட்டி ஷோவான இந்த நிகழ்ச்சியை நடிகை குஷ்பு மற்றும் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா ஆகியோர் தொகுத்து வழங்கி வந்தனர். இந்நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இறுதிப் போட்டி நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு நடுவராக டான்ஸ் மாஸ்டர் கலாவும் கலந்து கொண்டார்.

மொத்தம் 16 ஜோடிகள்
மொத்தம் 16 ஜோடிகளுடன் அக்டோபர் 17 ம் தேதி துவங்கப்பட்ட டான்ஸ் Vs டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு ஜோடியாக எலிமினேஷன் மூலம் வெளியேற்றப்பட்டு, கடைசியாக 4 ஜோடிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் அன்கிதா மற்றும் பூஜா டைட்டிலை வென்றனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது சீசனின் பிரம்மாண்ட இறதிப் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

பைனலில் 4 ஜோடிகள்
ஷாம், இனியா, அபிராமி வெங்கடாச்சலம் மற்றும் ஸ்ரீதர் ஆகிய நான்கு அணிகள் இறுதிப் போட்டியில் மோதின. ஒவ்வொரு ஜோடியும் தங்களின் அபார நடன திறமையை வெளிக்காட்டி, அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.

டைட்டில் வின்னர் இவங்க தான்
இறுதியில் மனோஜ் - அம்ரிதா ஜோடி முதல் பரிசையும், ப்ரத்வி - தியான் ஜோடி இரண்டாவது பரிசையும், காவ்யா - மகாலட்சுமி ஜோடி மூன்றாவது பரிசினையும் வென்றன. முதல் பரிசாக ரூ.5 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.3 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்பட்டன.

முதல் பரிசு எவ்வளவு தெரியுமா
சனி மற்றும் ஞாயிறு இரண்டு நாட்களுமே கிராண்ட் ஃபினாலே நடத்தப்பட்டது. இதில் நேற்றைய இறுதி நிகழ்ச்சியில் டைட்டிலை வென்றது யார் என அறிவிக்கப்பட்டு, டைட்டில் வென்ற ஜோடிக்கு கோப்பையுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











