4 நாட்கள் காத்திருக்க முடியாமல் ஆட்டம் போட்டு அசிங்கப்பட்ட டேனி காதலி

By Siva

Recommended Video

ஓவர் சீன் போட்டு பெயரைக் கெடுத்துக் கொண்ட டேனி காதலி- வீடியோ

சென்னை: 4 நாளில் டேனி வெளியே வருவது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் ஓவர் சீன் போட்டு பெயரைக் கெடுத்துக் கொண்டார் அவரின் காதலி.

கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தந்தனர். டேனியை பார்க்க அவரின் அம்மாவும், காதலியும் வந்தார்கள். அந்த பெண் தனது வருங்கால மாமியார் முன்பு டேனியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தார்.

அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்த சில நிமிடங்களில் பேசியதை விட முத்தம் கொடுத்ததே அதிகம்.

அம்மா

அம்மா

டேனியை கட்டிப்பிடித்து அவர் காதலி முத்த மழை பொழிந்ததை பார்த்த அவரின் அம்மா செய்வதறியாது நெளிந்தார். அதை கூட புரிந்து கொள்ளால் டேனியும், காதலியும் ஜமாய்த்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த பார்வையாளர்கள் முகம் சுளித்து அந்த பெண்ணை திட்டித் தீர்த்தார்கள். மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்கள் பங்கிற்கு கலாய்த்து மீம்ஸ் போட்டனர்.

வெளியேற்றம்

வெளியேற்றம்

நேற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து டேனி வெளியேற்றப்பட்டார். வழக்கம் போன்று கார்டை காட்டி போட்டியாளரை வெளியேற்றாமல் நேற்று சற்று வித்தியாசமாக விளையாடினார் கமல். முதலில் ஜனனி, டேனி, தாடி பாலாஜியை பச்சை பந்தை தேடவிட்டார். தாடி பாலாஜிக்கு பச்சை பந்து கிடைத்ததால் அவர் காப்பாற்றப்பட்டார். அதன் பிறகு டேனி, ஜனனியை பூத்துக்குள் நிற்க வைத்து விளையாட்டு காட்டினார் கமல்.

பாசம்

பாசம்

4 நாட்களில் டேனி வீட்டிற்கு வருவது தெரியாமல் அவரின் காதலி தேவையில்லாமல் தொலைக்காட்சியில் ஊரார் முன்பு இப்படி வெட்கம் இல்லாமல் முத்தம் கொடுத்து பெயரை கெடுத்துக் கொண்டார். ஒரு வேளை டேனி வெளியேற்றப்படுவது முன் கூட்டியே தெரிந்திருந்தால் அடக்கி வாசித்து பெயரை காப்பாற்றிக் கொண்டிருப்பார்.

யாஷிகா

யாஷிகா

வெளியேறுவது தெரியாமல் பிக் பாஸ் டைட்டிலை வென்றால் என்ன பேசுவேன் என்பதை வேறு பேசிக் காண்பித்தார் டேனி. பாவம் அவர். யாஷிகா, ஐஸ்வர்யாவுடன் சேர்ந்த பாவத்திற்கு அவர் வெளியேற்றப்பட்டுள்ளார். முன்னதாக ஐஸ், யாஷிகா ஆகியோருடன் ஒட்டி உறவாடிய ஷாரிக், மகத் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X