பிக் பாஸ் வீட்டில் முத்த மழை: வெட்கமே இல்லாமல் கொஞ்சிய டேனி, காதலி

By Siva

Recommended Video

அம்மாவிற்கு முன் காதலிக்கு முத்த மழை பொழிந்த டேனி...வீடியோ

சென்னை: பிக் பாஸ் வீட்டில் டேனியும், அவரின் காதலியும் நடந்து கொண்ட விதம் முகம் சுளிக்க வைக்கும்படி இருந்தது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் குடும்பத்தினர் வருகை தரும் வாரம். குடும்பத்தாரை பார்த்ததும் போட்டியாளர்கள் கதறி அழுகிறார்கள். இதை பார்த்த பார்வையாளர்களோ, பத்து ரூபாய்க்கு பிக் பாஸ் நடிக்கச் சொன்னால் ரூ. 30 ஆயிரத்துக்கு நடிக்கிறீர்களே என்று விமர்சித்துள்ளனர்.

என்னதான் குடும்பத்தாரை பிரிந்து இருந்தாலும், அவர்களை பார்த்ததும் இப்படியா அழுவார்கள். பிக் பாஸ் டச் போல.

அம்மா

அம்மா

நேற்று டேனியின் அம்மாவும், காதலியும் வந்தனர். டேனியை பார்த்ததும் அவர் அம்மா கண்கலங்கியபடியே வந்து அவரை கட்டிப்பிடித்து நலம் விசாரித்தார். மகனின் கன்னத்தில் முத்தமிட்டார். அம்மாவும், மகனும் பிற போட்டியாளர்களை போன்று கத்தி கதறாமல் இருந்ததை பார்க்க ஆறுதலாக இருந்தது. அவர்களின் பாசமும் எதார்த்தமாக இருந்தது.

அழுகை

அழுகை

அடுத்ததாக டேனியின் காதலி அழுது கொண்டே வந்து அவரை கட்டிப்பிடித்தார். டைட்டாக கட்டிப்பிடித்து ஊஊஊஊஊ என்ற சத்தத்துடன் அழுதார் டேனியின் காதலி. சத்தியமா முடியல பிக் பாஸ். என்ன தான் பிரிந்திருந்தாலும் இப்படியா அழுவார்கள். இதற்கும் ஏதாவது மசாலா தடவிய ஸ்க்ரிப்ட் கொடுத்து விட்டாரா பிக் பாஸ் என்றே சந்தேகம் வருகிறது.

கருமம்

கருமம்

டேனியின் காதலி சக போட்டியாளர்கள், பார்வையாளர்களாகிய நாம், அட நம்மை விடுங்க அவரின் வருங்கால மாமியார் முன்பு இப்படியா முத்தம் கொடுத்து சீன் போடுவது. பார்க்கவே கேவலமாக இருந்தது பிக் பாஸ். அந்த டேனியும் ஃப்ரீஸ் முடிந்த பிறகு முதலில் காதலியை கவனித்துவிட்டு அதன் பிறகே அம்மா, நல்லா இருக்கியா அம்மா என்று கேட்கிறார். அந்த அம்மா பாவம், மகனும் அவரின் காதலியும் முத்தமிடுவதை பார்த்தும் பார்க்காதது போன்று வேறு பக்கம் திரும்பியிருந்தார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காதலனுக்கு இப்படியா முத்தம் கொடுப்பது?. அதை பார்த்து ச்ச்சீ என்று கூறி திட்டாதவர்களே இல்லை. இது தான் குட்டு என்று டேனி தனது காதலியை அறிமுகம் செய்து வைத்தபோது அந்த புள்ளைய நாலு குட்டு குட்டுங்கய்யா என்றே சொல்லத் தோன்றுகிறது. காதல் இருக்க வேண்டியது தான் அதற்காக பொது இடத்தில் இப்படியா நடந்து கொள்வது.

புறம் பேசுதல்

புறம் பேசுதல்

யாரைப் பற்றியும் புறம் பேசாதே என்று டேனிக்கு அவர் அம்மா அறிவரை வழங்க அவரும், காதலியும் முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர். வெட்கம் என்ற ஒரு விஷயம் டேனிக்கும், அந்த பொண்ணுக்கும் கொஞ்சம் கூட இல்லை. டேனியின் காதலி வந்த சிறிது நேரத்தில் பேசியதை விட முத்தம் கொடுத்ததே அதிகம். இத்தனை கேமராக்கள் இருக்கிறது, கோடிக்கணக்கானோர்(?) பார்க்கிறார்களே என்று தெரிந்தும் இந்த அளவுக்கு வெட்கமே இல்லாமல் நடந்து கொண்டதை பார்க்க நமக்கு தான் கூச்சமாக இருந்தது.

முகம் சுளிப்பு

முகம் சுளிப்பு

நான் ரொம்ப காஞ்சு போயிருக்கேன் பிக் பாஸ் என்று கூறி ஓடிப் போய் அந்த பெண்ணை மீண்டும் கட்டிப்பிடித்தார் டேனி. இந்த அளவுக்கு தான் வெளிப்படையாக இருக்க முடியுமா டேனி. தயவு செய்து இதை எல்லாம் உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். பிக் பாஸ் வீட்டில் நடப்பதை ஊரே பார்க்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம். நன்றி பிக் பாஸ், வீடு முழுக்க கேமரா வைத்தது. பார்வையாளர்கள் தப்பித்தோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X