பிக் பாஸ் வீட்டிற்கு வந்த காதலியை மணந்த டேனி: ஆனால் கல்யாணம் தான்...
Recommended Video

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் முதல் வேலையாக தனக்கு திருமணமான விஷயத்தை தெரிவித்துள்ளார் டேனி.
பிக் பாஸ் 2 வீட்டில் இருந்த டேனி நேற்று வெளியேற்றப்பட்டார். முன்னதாக அவரின் காதலி குட்டு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து டேனியை முத்த மழையில் நனைய வைத்தார்.
இந்நிலையில் டேனி குட்டுவை திருமணம் செய்த விஷயத்தை அறிவித்துள்ளார்.
டெனிஷா
டேனி தனது காதலியான குட்டுவை நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். என் அழகான குட்டு என் மனைவியாகிவிட்டார் திருமதி. டெனிஷா டேனியல். குடும்ப பிரச்சனை காரணமாக இந்த அழகான தருணத்தை இந்நாள் வரை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. கணவன், மனைவியாக நாங்கள் புது வாழ்வை துவங்கும் நேரத்தில் உங்களின் ஆசியை கோருகிறோம் என்று டேனி இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ்
டேனியின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை பார்த்தால் அவர் பிக் பாஸ் வீட்டிற்கு செல்லும் முன்பே ரகசியமாக திருமணம் செய்தது தெரிகிறது. குட்டு வந்திருந்தபோது கூட ரிசப்ஷனுக்கு அவர் அப்பா ஏற்பாடு செய்கிறாராம் என்று டேனி சக போட்டியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அப்படி என்றால் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும்போதே டேனி சிங்கிள் இல்லை.

மனைவி
பிக் பாஸ் வீட்டிற்கு குட்டு டேனியின் மனைவியாகவே வந்துள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக குட்டுவை தனது வருங்கால மனைவி என்று அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்து ஏமாற்றியுள்ளார் டேனி. காதல் கல்யாணத்தில் இதெல்லாம் சகஜமப்பா. வாழ்த்துக்கள் டேனி. மனைவியாகவே இருந்தாலும் நீங்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் அதுவும் உங்களின் அம்மா முன்பு அப்படி நடந்து கொண்டது கொஞ்சம் ஓவர் தான்.

பெண்
டேனியின் திருமண செய்தியை பார்த்ததும் கட்டிப்பிடி வைத்தியர் சினேகன் நினைவு தான் வருகிறது. பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட அவருக்கு திருமணம் செய்து வைக்க சக போட்டியாளர்கள் ஆசைப்பட்டனர். அந்த ஆசை இன்னும் ஆசையாகவே உள்ளது. என்ன சினேகன், நீங்கள் எப்பொழுது திருமணம் செய்யப் போகிறீர்கள்?


Click it and Unblock the Notifications











