Eramana rojave serial: நாட்டரசன் வீட்டு மருமகளுங்க சூப்பர்!
சென்னை: விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே சீரியலில் அக்கா தங்கையான நாட்டரசன் வீட்டுக்கு மருமகளாகிடறாங்க. அண்ணன் வெற்றியை மலரும், தம்பி புகழை அகிலாவும் கல்யாணம் செய்துக்கறாங்க.
இருவர் கல்யாணமும் யதேச்சையாக நடந்துவிடுகிறது. இதில் மலரும், வெற்றியும் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக்கறாங்க.சேர்ந்து வாழவும் ஆசைப்படறாங்க. அகிலாவோ கெட்ட பசங்க ஜவுளிக் கடையில் எடுத்த வீடியோவால் நிச்சயித்த மாப்பிளையுடன் நடக்க இருந்த கல்யாணம் நின்று போயி, முதல் மாப்பிள்ளை வெற்றியின் தம்பி புகழ் தாலி கட்டிவிடறான்.
அகிலாவும், புகழும் எப்போதும் சண்டை, புகழ் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவது, இது பிடிக்காமல் அகிலா கத்துவது,புகழ் அடிப்பதுன்னு அகிலா வாழக்கை அழுகையா போயிகிட்டு இருக்குது.

மலர் டீச்சர்
அக்கா மலருக்கு டீச்சர் வேலை கிடைச்சுடுது. நாட்டரசனின் மனைவி ஒத்துக்க மறுத்தலும்,அவர் பேசி மலரை வேலைக்கு அனுப்பி வைக்கறார். மலருக்கு துணையாக வெற்றி நல்லா சப்போர்ட் பன்றான். ஆனால், அகிலாவின் புருஷன் புகழ் எப்போதும் குடியிலில் இருப்பதை பொறுத்துக்க முடியாத அகிலா, தண்டச்சோறு சாப்பிடறீங்க. எல்லாரும் சமபாதிக்கறாங்க நானும் நீயும்தான் இந்த வீட்டில் தண்ட சோறுன்னு சொல்லியும் அவன் திருந்தலை.

டியூஷன் எடுக்க
அக்காவுடன் சேர்ந்து வீட்டு மொட்டை மாடியில் டியூஷன் எடுக்கலாம்னு முடிவு செய்து அக்காவிடம் கேட்கறா. அவள் தனது புருஷனிடம் சொல்லி ,மாமனாரிடமும் பர்மிஷன் வாங்கிவிட, மாமியார் நடத்த கூடாதுன்னு பிரச்சனை பண்றங்க. இருந்தாலும் கடைசியில் டியூஷனுக்கு ஓகே சொல்லி பிள்ளைகளும் வந்துடறாங்க.

கணித பாடம்
மொட்டை மாடியிலிருந்து மருமகள்கள் கணித பாடம் எடுத்துக் கொண்டு இருக்க,மாமனார், தாத்தா,புருஷன், புருஷனின் நண்பன் எல்லாரும் மறைஞ்சு நின்னு பாடம் எடுக்கும் அழகை பார்க்கிறார்கள்.அப்போது திடீரென்று சஷ்டியை நோக்க சரவண பவனார் என்று கந்தர் சஷ்டி கவசத்தை வேகமாக ஒலிக்கவிட்டு, அட்டூழியம் செய்கின்றனர் மாமியார் நாத்தனார் ஆகியோர்.

சஷ்டி கவச ராகத்தில்
பிள்ளைக்கள் வாய்ப்பாடு சொல்வதை விட்டு, கந்தர் சஷ்டி கவசத்தில் கவனம் செலுத்த. நாட்டரசன் கீழே போயி மனைவியிடம் சத்தம் போடறார்.சாமி கும்பிட கூட எனக்கு சுதந்திரம் இல்லையான்னு மனைவி கேட்க ஒன்றும் பேசாமல் மேலே வந்துடறார் நாட்டரசன்.
அதற்குள் மலரும், அகிலாவும் சேர்ந்து கந்தர் சஷ்டி கவசம் ராகத்தில் ஆறாம் வாய்ப்பாட்டை சொல்லிக் கொடுக்க ஆரம்பிக்க ,குழந்தைகளும் கப்பென்று பிடித்து கணக்கு வாய்ப்பாட்டை சொல்ல ஆ ரம்பிக்கிறார்கள். இது மாதிரி புது வழியில் கல்வி கற்று கொடுப்பது நன்றாகத்தான் இருக்கிறது.


Click it and Unblock the Notifications











