»   »  விஜய் டிவியில் டிடியின் அடுத்த அதிரடி 'அச்சம் தவிர்'... ஜூன் 2 முதல் ஒளிபரப்பு

விஜய் டிவியில் டிடியின் அடுத்த அதிரடி 'அச்சம் தவிர்'... ஜூன் 2 முதல் ஒளிபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் 'அச்சம் தவிர்' என்ற அதிரடி திரில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறார் திவ்யதர்ஷினி. நாளை ஜூன் 2 முதல் ஒவ்வொரு வியாழன் முதல் ஞாயிறு வரை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியின் நம்பர்-ஒன் தொகுப்பாளினி என்ற பெயரெடுத்தவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கிய, காபி வித் டிடி, ஜோடி நம்பர்-ஒன், விஜய் அவார்ட்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தன.

அந்த வகையில் 12 ஆண்டுகளாக விஜய் டிவியின் பிரதான தொகுப்பாளினியாக இருந்த டிடியின் காபி வித் டிடி நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டபோது, அவர் அந்த டிவியில் இருந்தே விலகி விட்டதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த டிடி, மீண்டும் நான் விஜய் டிவியில் பிஸியாவேன் என்று கூறி வந்தார். அதற்கேற்ப தற்போது காபி வித் டிடி மட்டுமின்றி, காமெடி நிகழ்ச்சியான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார் டிடி.

திவ்யதர்ஷினியின் அடுத்த நிகழ்ச்சி

திவ்யதர்ஷினியின் அடுத்த நிகழ்ச்சி

அச்சம் தவிர் என்ற நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூன் 2ம்தேதி முதல் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில், சின்னத்திரை, சினிமா என இரண்டு மீடியாக்களில் உள்ள நட்சத்திரங்கள் கலந்து கொள்கிறார்களாம்.

சவலான நிகழ்ச்சி

சவலான நிகழ்ச்சி

அச்சம் தவிர் நிகழ்ச்சியில் நெஞ்சை பதபதக்க வைக்கும் போட்டிகளும், பார்வையாளர்களை அச்சுறுத்தும் மோதல்களும் இடம்பெறுகிறதாம். இந்நிகழ்ச்சி திவ்யதர்ஷினிக்கும் ஒரு சவாலான நிகழ்ச்சியாக இருக்கும் என்கிறார்கள்.

உடைகளில் அதீத கவனம்

உடைகளில் அதீத கவனம்

நிகழ்ச்சி தொகுப்பாளரான டிடி, டிவி நிகழ்ச்சியில் அணியும் உடைகளில் ஒருவித நேர்த்தி இருக்கும். பல வித உடைகளில் வலம் வந்தாலும் திவ்யதர்ஷினிக்கு பிடித்த உடை புடவைதானாம் எப்போது எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போது எல்லாம் புடவை கட்டி அதற்கு மேட்ச் ஆக நகை போட்டு அழகு படுத்திக்கொள்வாராம்.

எப்பவுமே அப்டேட்

எப்பவுமே அப்டேட்

மீடியாவில் வேலை பார்க்கிறதால, அப்டேட்டா டிரெஸ் பண்ண வேண்டியது ரொம்ப முக்கியம் என்று கூறும் டிடி, ஃபேஷன் பத்திரிகைகளில் இருந்து, ஹீரோயின்ஸ் உடுத்தும் ஆடைகள் வரை தொடர்ந்து கவனித்து ஃபேஷனில் அப்டேட் செய்து கொள்வாராம் டிடி.

ஷாப்பிங் செய்ய ஆசை

ஷாப்பிங் செய்ய ஆசை

சென்னை, தி.நகர், ரங்கநாதன் தெருவை சுத்தி சுத்தி வந்து ஷாப்பிங் செய்ய ஆசை இருந்தாலும் அதற்கெல்லாம் நேரமில்லையாம். ஒரு டிரெஸ்ஸை அதிக பட்சம் ஐந்து முறை மட்டுமே போடும் டிடி பின்னர் அந்த உடையை யாருக்காவது கொடுத்து விடுவாராம்.

ஆன்லைன் நோ ஷாப்பிங்

ஆன்லைன் நோ ஷாப்பிங்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யவே மாட்டாராம். எப்போவெல்லாம் வாய்ப்புக் கிடைக்குதோ, அப்போவெல்லாம் தவறவிடாம புடவை கட்டிப் பேன். அதுக்கு மேட்சிங்கா நகை போடுவேன் என்கிறார் டிடி.

குஷ்பு, ராதா

குஷ்பு, ராதா

னக்கு ராதா மேடம், குஷ்பு மேடம் டிரெஸ்ஸிங் சென்ஸ் ரொம்பப் பிடிக்கும். ரெண்டு பேருமே ஆடை விஷயத்தில் அவ்வளவு மெனக்கெடுவாங்க. அதனாலதான், அவங்க காஸ்ட்யூம்ல ஒரு தனித்துவம் இருக்கும் என்கிறார் டிடி.

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

விஜய் டிவியில் காபி வித் டிடி போல அச்சம் தவிர் நிகழ்ச்சியிலும் அசத்தல் தொகுப்பாளினி என்று பெயர் வாங்குவாரா டிடி? என்று கேட்டால் நாளை முதல் ஞாயிறு வரை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியை பாருங்க அப்புறம் உங்க கருத்தை சொல்லுங்க என்கிறார்.

English summary
Vijay TV anchor Divyadarshini fondly called DD is ready to set the stage on fire on the channel with a stunt-reality show Achcham Thavir. The show packed with thrills and emotions will start airing live on the popular entertainment channel Vijay TV from June 2, 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil