விஜய் டிவியில் டிடியின் கல்யாணம்…
விஜய் டிவி தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்சினியின் திருமணம் இந்த வாரம் நம்ம வீட்டுக் கல்யாணம் நிகழ்ச்சி ஞாயிறன்று ஒளிபரப்பானது.
நம்ம வீட்டுக்கல்யாணம் நிகழ்ச்சியில் பிரபலங்களின் திருமணம் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களை கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களின் மலரும் நினைவுகளை அசைபோட வைக்கும் நிகழ்ச்சி.
கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இந்த நிகழ்ச்சியை டிடி தொகுத்து வழங்கினார். இப்போது அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். கடந்த வாரம் சனிக்கிழமையும், இந்தவாரம் ஞாயிறன்றும் டிடியின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

திருமண சடங்குகள்
திருமண நிச்சயம் தொடங்கி, சடங்குகள், காசியாத்திரை, திருமணம், ரிசப்சன் என அனைத்துமே ஒளிபரப்பானது.

பிரபலங்கள் வாழ்த்து
டிடியின் திருமண விழா மட்டுமல்லாது ரிசப்சனுக்கும் ஏராளமான பிரபலங்கள் பங்கேற்று தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

எனக்கும் சீக்கிரம் கல்யாணம்
நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரேம்ஜி டிடி ஐ வாழ்த்திய கையோடு, எனக்கும் சீக்கிரமே கல்யாணம் நடக்கும் என்று கூறினார்.

எல்லோருக்கும் அக்கா
நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சீரியல் நடிகர்கள் என எல்லோருமே டிடியை அக்கா என்று கூறியே வாழ்த்தினர். ரிசப்சனுக்கு வந்த அனைவரையும் அன்போது கட்டி அணைத்து வரவேற்றார் டிடி.

விட்டுக்கொடுக்கணும்
நிகழ்ச்சியில் வாழ்த்திய சுகாசினி, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் மணவாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்றார். அது டிடிக்கு அதிகமாவே இருக்கிறது என்றார்.

ஆடி அசத்திய டிடி
திருமண ரிசப்சனுக்கு வந்த ரோபோ சங்கர் தனது மனைவியோடு மேடையில் ஆடி அசத்தினார். தோழியர் மேடையில் ஆட மணப்பெண் டிடியும் ஆடி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











