Divyadharshin: அத்தனை வலிகளையும் வென்ற புன்னகை.. கலர்புல் பிளேஸரில் மாஸ் காட்டும் டிடி!
சென்னை: சின்னத்திரையில் 20 ஆண்டுகளைக் கடந்து எத்தனையோ ஹிட் நிகழ்ச்சிகளைத் தடையின்றித் தொகுத்து வழங்கி, இன்றும் டாப் தொகுப்பாளினியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் திவ்யதர்ஷினி. பட்டிதொட்டி எங்கும் 'டிடி' என்ற பெயரால் அறியப்படும் இவர், இன்ஸ்டாகிராமில் அட்டகாசமான போட்டோக்களை பகிர்ந்துள்ளார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருடன் டிடிக்கு கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றது. பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்ட இந்தத் திருமணத்தை விஜய் டிவி குடும்பமே முன்னின்று, டிடிக்கு நலங்கு வைத்துத் தங்களது வீட்டுப் பெண் போலக் கொண்டாடியது. திருமணத்திற்குப் பிறகும் தாலி வெளியே தெரியும்படியே பல நிகழ்ச்சிகளைத் துடிப்புடன் தொகுத்து வழங்கினார் டிடி. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர்களது திருமண வாழ்க்கை 3 ஆண்டுகள் கூட நீடிக்காமல் விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

கண்ணீரில் டிடி: தனியாக வாழ்ந்து வந்த டிடிக்கு அடுத்தகட்ட சோதனையாகக் காலில் கடுமையான வலி ஏற்பட்டது. அதற்காகச் செய்யப்பட்ட ஒரு சாதாரண அறுவை சிகிச்சை எதிர்பாராத விதமாக விபரீதத்தில் முடிய, அவரால் சில நிமிடங்கள் கூட நிற்க முடியாத அவதி ஏற்பட்டது. மேடையில் மணிக்கணக்காக நின்று பேசும் ஒரு தொகுப்பாளினிக்கு, நிற்கவே முடியாத சூழல் ஏற்பட்டது பேரிடியாக அமைந்தது. தான் பட்ட இந்த வேதனையை ஒரு பேட்டியில் டிடி கண்ணீருடன் பகிர்ந்து கொண்டார். அதன் பின், மன உறுதியோடு 'மூட்டு மாற்று அறுவை சிகிச்சை' செய்து கொண்ட டிடி, மெல்ல மெல்லக் குணமடைந்து மீண்டு வந்தார். தற்போது மீண்டும் சினிமா ஆடியோ லான்ச்கள் மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளைத் தனது டிரேட்மார்க் பாணியில் தொகுத்து வழங்கி அசத்தி வருகிறார்.
லேட்டஸ்ட் போட்டோஷூட்: தற்போது டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஸ்டைலான மற்றும் பாசிட்டிவ் எனர்ஜி நிறைந்த லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். வெள்ளை நிற இன்னர் மற்றும் பேண்ட்டிற்கு மேட்ச்சாக, கண்ணைக் கவரும் பல வண்ணங்களில் மிரர் ஒர்க் கொண்ட செக்க்டு பிளேஸர் அணிந்து செம்ம அல்ட்ராமோடர்ன் லுக்கில் அசத்துகிறார். கழுத்து, காதுகளில் ஸ்டைலா கம்பலை அணிந்து அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். எத்தனை வலிகளைக் கடந்து வந்தாலும், மேடையில் காட்டும் அதே எனர்ஜி மற்றும் வசீகர புன்னகையோடு கேமராவிற்குப் போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் சாய்ந்தபடி ரிலாக்ஸாக அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications