சும்மா மாஸா.. கெத்தா.. ஈஃபிள் டவர் முன்னாடி நின்று போஸ் கொடுத்த டிடி நீலகண்டன்.. வேறலெவல் கேப்ஷன்!
சென்னை: துபாய், பிரான்ஸ் என உலகம் சுற்றும் மங்கையாக மாறியுள்ளார் விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி நீலகண்டன்.
விஜய் டிவி பிரபலங்கள் எல்லாம் வரிசையாக சொகுசு கார் வாங்கி போஸ் கொடுத்து போட்டோக்களாகவும் வீடியோக்களாகவும் ஷேர் செய்து வந்தனர்.
இந்நிலையில், வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்ற புகைப்படத்தை டிடி நீலகண்டன் ஷேர் செய்துள்ளார்.

மூன்று கண்ட அழகிகள்
சுற்றுலா விரும்பியான டிடி நீலகண்டன் சமீபத்தில் துபாய்க்கு சென்றபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளினார். ஆசிய பெண்ணான டிடி உடன் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களை சேர்ந்த அழகிகள் இருப்பதாக கேப்ஷன் போட்டு இருந்தார்.

பிரான்ஸ் டூர்
துபாயை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள டிடி நீலகண்டன் பாரிஸ் நகரத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். பிரபலமான காபி ஷாப் அருகே காபி கலர் ஓவர் கோட்டை போட்டுக் கொண்டு கலக்கலாக போஸ் கொடுத்திருந்தார்.

ஆர்க் டி டிரியோம்ப் அருகில்
பாரிஸ் நகரில் உள்ள பழம்பெரும் புராதான நினைவுச் சின்னமான ARC DE TRIOMPHE அருகே நின்றபடி அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ஷேர் செய்த டிடி நீலகண்டன் அதன் வரலாற்றையும் சிறப்பம்சத்தையும் கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். 1806ம் ஆண்டு இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஈஃபிள் டவர் முன்பாக
பாரிஸ் நகரத்துக்கு சென்றுவிட்டு ஈஃபிள் டவர் முன்பாக போட்டோ எடுக்காமலா இருப்பார் டிடி நீலகண்டன். கடும் குளிரில் வெள்ளை சட்டை, நீல நிற பேன்ட் மற்றும் கூலர்ஸ் அணிந்து கொண்டு செம மாஸாக போஸ் கொடுத்து ஈஃபிள் டவரின் மொத்த வரலாற்றையும் கேப்ஷனாக கொடுத்துள்ளார்.

ஈஃபிள் டவருக்கு மனைவி இருக்காங்க
ஈஃபிள் டவர் அருகே கடுங்குளிரில் நின்றபடி போஸ் கொடுத்த டிடி நீலகண்டன் அதுபற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் ஷேர் செய்துள்ளார். கோடை காலத்தில் 6 இன்ச் உயரமாகவும் குளிர் காலத்தில் 6 இன்ச் குறைவாகவும் இருக்குமாம் இந்த ஈஃபிள் டவர். 20 ஆண்டுகளில் இடித்து விடலாம் என்று எண்ணியே இதனை கட்டியதாகவும் பின்னர் இதன் அழகில் மயங்கி அப்படியே விட்டு விட்டார்கள் என்றும் அமெரிக்க பெண்மணி இந்த ஈஃபிள் டவரை திருமணம் செய்து கொண்டு எரிகா ஈஃபிள் என தனது பெயரையே மாற்றிக் கொண்டார் என்றும் டிடி பதிவிட்டுள்ளார்.

சேர்த்து வைத்த காசு
திடீரென டிடி நீலகண்டன் இப்படி துபாய், பிரான்ஸ் என சுற்றுலா செல்கிறாரே ஏதாவது பெரிய புதையல் கிடைத்து விட்டதா என ரசிகர்கள் கேட்டு விடக் கூடாது என்பதற்காக சிறு வயது முதலே இதுக்காக காசு சேர்த்து வைத்தேன் என பின் குறிப்பு எல்லாம் போட்டு லைக்குகளை போடுங்க என கெஞ்சி வருகிறார்.


Click it and Unblock the Notifications











