தென்னாப்பிரிக்காவில் 24 வயது இளைஞர் மீது சாய்ந்து போஸ் கொடுத்த டிடி நீலகண்டன்.. அவரு யாரு தெரியுமா?

சென்னை: டிடி என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி தென்னாப்பிரிக்காவில் விடுமுறைக்கு சென்ற நிலையில், இளைஞர் ஒருவரின் மீது சாய்ந்துக் கொண்டு கொடுத்துள்ள போஸை பார்த்த நெட்டிசன்கள் யார் அவர் என அலசி ஆராய்ந்து வருகின்றனர். ஆனால், அவர் யார் என்பது தெரிந்த ரசிகர்கள் செம ஷாக் ஆகியுள்ளனர்.

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வந்த டிடி நீலகண்டன் 40 வயதை கடந்தும் இன்னமும் ஹீரோயின் போல செம க்யூட்டாகவும் அழகாகவும் உள்ளார். தனது காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நீண்ட நேரம் முன்பை போல இப்போதெல்லாம் அவரால் ஈவென்ட் ஷோக்களில் நின்று பேச முடியவில்லை.

DD Neelakandan shares a recent pics with her sister son shocks fans

ஆனால், அவ்வப்போது சில பிரபல நடிகர்களை பேட்டியெடுப்பது, சில பெரிய நிகழ்ச்சிகளை நடத்துவது என்று பிசியாக உள்ள டிடி நீலகண்டன் ஜிடி ஹாலிடேஸின் கிராண்ட் அம்பாசிடராகவே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்காவில் டிடி நீலகண்டன்: சுற்றுலா நிறுவனமான ஜிடி ஹாலிடேஸின் விளம்பர தூதுவராக செயல்பட்டு வரும் டிடி நீலகண்டன் அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்ற டிடி நீலகண்டன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அதற்கு காரணம் அவருடன் இருக்கும் அந்த 24 வயது இளைஞர் தான்.

அக்கா மகன்: திவ்யதர்ஷினிக்கு முன்னதாக அவருடைய அக்கா பிரியதர்ஷினியும் மீடியாவில் நுழைந்து பிரபலமானவர் தான். எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்களில் இப்போதும் நடித்து வருகிறார். அவருடைய மகன் ரிஷி வம்சியின் மீது சாய்ந்துக் கொண்டு தான் அப்படியொரு போஸ் கொடுத்திருக்கிறார் டிடி நீலகண்டன். அந்த போட்டோவுக்கு ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

DD Neelakandan shares a recent pics with her sister son shocks fans

சித்தியா? அக்காவா?: 46 வயதை கடந்த பிரியதர்ஷினியின் மகன் ரிஷியுடன் டிடி நீலகண்டன் தென்னாப்பிரிக்காவில் சுற்றுலா செய்து வரும் நிலையில், சித்தியா? அக்காவா? என்றே தெரியவில்லையே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இப்போதான் ரிஷியின் 1வது பிறந்தநாள் பாம்க்ரூவ் ஹோட்டலில் கொண்டாடியது போலத் தெரிகிறது. அதற்குள் அவருக்கு 24 வயதாகிவிட்டதா? இப்படி வளர்ந்துவிட்டாரே என டிடி நீலகண்டனின் நண்பர் ஒருவரும் கமெண்ட் போட்டுள்ளார்.

வயசே ஆகாதா?: நடிகைகளை போலவே தொகுப்பாளினியான டிடி நீலகண்டனும் தனது உடலை எப்போதுமே கச்சிதமாகவும் இளமையாகவும் வைத்துக் கொள்கிறார். இந்த போட்டோவில் அக்கா மகனுடன் டிடி நீலகண்டன் போஸ் கொடுத்ததை பார்த்து பலரும் உங்களுக்கு வயசே ஆகாதா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

2வது திருமணம் செய்யவில்லை: சமீபத்தில் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம் செய்துக் கொண்டார். ஆனால், 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட டிடி நீலகண்டன் மனக்கசப்பு காரணமாக அவரை 2017ம் ஆண்டு பிரிந்த நிலையில், அதன் பின்னர் 2வது திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். சீக்கிரமே நீங்களும் உங்களுக்கான துணையை தேடிக் கொள்ளுங்கள் டிடி என்றும் சில ரசிகர்கள் அக்கறையுடன் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். தென்னாப்பிரிக்காவில் எடுத்த புகைப்படங்களுக்கும் லைக்குகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X