துபாயில் தூள் கிளப்பும் டிடி நீலகண்டன்.. குட்டி கவுனில் என்னம்மா வீடியோ போட்டு இருக்காரு பாருங்க!

சென்னை: விவாகரத்துக்கு பிறகு மறுமணம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து தனியாக வாழ்ந்து வரும் டிடி நீலகண்டன் எனும் திவ்யதர்ஷினி தனக்கு பெரிதாக ஆண் துணையே தேவையில்லை என்றும் தன்னுடைய வாழ்க்கையை ஜாலியாக தன்னால் வாழ்ந்து காட்ட முடியும் என நிரூபித்து வருகிறார்.

விஜய் டிவியின் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான டிடி நீலகண்டன் சின்னத்திரையில் பிரபலமான தொகுப்பாளினியாக பல ஆண்டுகாலம் அசத்தி வருகிறார். அடிக்கடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வரும் டிடி நீலகண்டன் தற்போது துபாயில் சுற்றுலா செய்து வரும் நிலையில் அங்கு எடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Television Vijay Tv DD Neelakandan Dubai

தமிழ் சினிமா நடிகைகளுக்கு இணையாக டிடி நீலகண்டனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஃபாலோயர்களாக உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 26 இலட்சம் ரசிகர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

பிரபல தொகுப்பாளினி: 39 வயதாகும் டிடி நீலகண்டன் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாக வலம் வருகிறார். விஜய் டிவியில் 1999-ஆம் ஆண்டு ஒளிபரப்பான உங்கள் தீர்ப்பு நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின்னர் ஜோடி நம்பர் ஒன், பாய்ஸ் vs கேர்ள்ஸ், சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அச்சம் தவிர், என்கிட்ட மோதாதே, பிக் பாஸ் நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக இவர் பங்கேற்றுள்ளார்.

பல படங்கள்: சுபயாத்ரா எனும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1990 ஆம் ஆண்டிலேயே சினிமாவில் நடித்தவர் டிடி நீலகண்டன். அதன் பின்னர் 2003 ஆம் ஆண்டு ஜெயராம் மற்றும் ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியான ஜூலி கணபதி படத்தில் நடித்த திவ்யதர்ஷினி மாதவன் நடித்த நளதமயந்தி, ஷெரின் நடித்த விசில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா, தனுஷ் இயக்கத்தில் வெளியான ப. பாண்டி , ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான சர்வம் தாளமயம், சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல், கடைசியாக இந்த ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ஜோஷ்வா இமை போல் காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி பல ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் நடித்துள்ளார்.

துபாய் டூர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி க்யூட்டான போட்டோக்களையும் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் டிடி நீலகண்டன் தற்போது துபாயில் சுற்றுலா செய்து வரும் நிலையில் அங்கே குட்டி கவுன் அணிந்து எடுத்த வீடியோ ஒன்றை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டிடி நீலகண்டன் போஸ்ட் போட்டாலே டிரெண்டாகி விடும் நிலையில், இந்த போஸ்ட்டுக்கும் ஏகப்பட்ட லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X