டிடியின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது.. பல தடைகளை கடந்து ஜெயித்த எதிர்நீச்சல் ரேணுகா!

சென்னை: மக்களின் மனதில் இடம் பிடித்த தொகுப்பாளியான டிடியின் அக்கா தான் பிரியதர்ஷினி. தாவணிக்கனவுகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவர், இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டை பெற்றார். தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ரேணுகாவாக நடித்து வருகிறார். நடிகையாக நிலையான இடத்தை பிடிக்க இவர் கடந்து வந்த வலிகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீலகண்டன், ஸ்ரீலதா தம்பதியின் முதல் மகளாக 1978 ஆம் ஆண்டு ஜூன் 4ந் தேதி சிங்கப்பூரில் பிறந்தார் பிரியதர்ஷினி. நடனத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர் முறைப்படி நடனம் கற்றுக்கொண்டார். பாக்கியராஜ் இயக்கிய தாவணிக்கனவுகள் திரைப்படத்தில் நடித்து சிவாஜியிடம் பாராட்டை பெற்ற இவர் தொகுப்பாளியாகவும், செய்திவாசிப்பாளராகவும் சன் தொலைக்காட்சியில் பணியாற்றினார். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதால், சிறிது வயதிலேயே பிரியதர்ஷினி சன் டிவியில் வாய்ப்பு தேடி சென்றார். அப்போது தான் 'மலரும் மொட்டும்' என்ற நிகழ்ச்சியை தொககும் வாய்ப்பு கிடைத்தது.

DD Neelakandan priyadharshini Story
Photo Credit:

நடிகை பிரியதர்ஷினி: அந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதிகை தொலைக்காட்சியில் விழுதுகள் சீரியலில் முக்கியமான ரோலில் நடித்தார். அதன்பின், ரேகா ஐபிஎஸ், எத்தனை மனிதர்கள், கோலங்கள் என அடுத்தடுத்து சீரியலில் நடித்து வந்த பிரியதர்ஷினி, சன் தொலைக்காட்சியில் எடிட்டராக இருந்த ராமகிஷோர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கிரிஷ் என்ற மகன் பிறந்த நிலையில் சில ஆண்டுகள் அனைத்திலும் இருந்து ஒதுங்கி இருந்த பிரியதர்ஷினி மீண்டும் மானட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரிசை வென்றார். பின், விஜய் டிவியில் பாய்ஸ் வெசஸ் கேல்ஸ் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இப்படி மெல்ல மெல்ல பல போராட்டங்களை சந்தித்து இன்று உச்சத்தை அடைந்து இருக்கிறார் பிரியதர்ஷினி.

பல போராட்டம்: அண்மையில் பிரியதர்ஷினி அளித்த பேட்டியில், நானும் டிடியும் இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமே எங்கள் அப்பா கொடுத்த தைரியம் தான். அவர் இறந்த பிறகு வாழ்க்கையில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. பல கஷ்டங்களை அனுபவித்தோம். பல போராட்டங்களை கடந்து இன்று இந்த இடத்தில் இருக்கிறோம் அதற்கு காரணம் அப்பா கொடுத்த தைரியம் தான். இந்த வளர்ச்சியை பார்க்க அப்பா இல்லையே என்ற வருத்தம் மனதிற்குள் இருக்கிறது.

DD Neelakandan priyadharshini Story
Photo Credit:

டிடியின் வாழ்க்கை: நான் வீட்டின் மூத்தவளாக இருந்தாலும், டிடி எனக்கு எப்பொழுதுமே உறுதுணையாக இருந்துள்ளார். என்னுடைய குடும்பம், அம்மா, தம்பி என அனைவரையும் பார்த்துக்கொண்டது அவர்தான். அவர் இல்லை என்றால் என்னால் இந்த இடத்திற்கு வந்து இருக்கவே முடியாது. என்னுடைய மகன், கிரிஷ் டிடியின் செல்லப்பிள்ளை, என் மகனை அவள் மகன் போல அன்பும் பாசத்தையும் கொட்டி வளர்த்து வருகிறாள்.திருமண விஷயத்தில் டிடி யின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆசை ஆசையாக காதலித்தது திருமணம் செய்து கொண்டாள் டிடி. ஆனால், அந்த திருமண வாழ்க்கையில் சரியாக அமையவில்லை.

அனைவரின் வலி: அது ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பெரிய வலியாக உள்ளது. அதேபோல, அவளது காலில் பிரச்சனை ஏற்பட்டு நடக்கவே முடியாமல் கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் டிடி அவதிப்பட்டால். இருந்தாலும் குடும்பத்திற்காக அந்த வலிகளை தாங்கிக்கொண்டால், இப்பொழுதுதான் மூட்டு அறுவை சிகிச்சை செய்து அதிலிருந்து சற்று மீண்டு இருக்கிறாள். இன்று நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் எங்களுடைய கடுமையான உழைப்புதான் என பிரியதர்ஷினி ஒரு பேட்டியில் குடும்பம் பற்றி கூறியிருந்தார். அண்மையில் பிரியதர்ஷினியின் தம்பிக்கு தடபுடலாக திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X